×
 

பொங்கலுக்கு மஞ்சள் கிழங்கையும் சேர்த்து குடுங்க... முதல்வருக்கு நயினார் வலியுறுத்தல்...!

பொங்கல் பரிசு தொகுப்பில் மஞ்சள் சேர்த்து வழங்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

தைப்பொங்கலுக்கு கரும்பு வழங்கப்படுவதை போல மஞ்சள் கிழங்கையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி இருக்கிறார். தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது ஒரு நீண்டகால வழக்கமாகும்.

இத்திட்டம் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாட உதவும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.கடந்த ஆண்டுகளில் இத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற அடிப்படைப் பொருட்கள் இடம்பெற்றன. சில ஆண்டுகளில் ரூ.1000 முதல் ரூ.2500 வரை ரொக்கமும் சேர்க்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணங்களால் சில சமயங்களில் ரொக்க உதவி நீக்கப்பட்டது.

இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டமும் இதனுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.தற்போது, 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில், பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்குக் கரும்பு வழங்குவது போல, மஞ்சள் கிழங்கையும் திமுக அரசு வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு... இது தான் மத நல்லிக்கணமா? நயினார் கேள்வி..!

மஞ்சளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை தரப்படும் என 2021 திமுக தேர்தல் அறிக்கையில் கூறி ஏமாற்றியதற்குப் பிராயச்சித்தமாக, விவசாயிகளிடமிருந்து மஞ்சளைக் கொள்முதல் செய்து, பொங்கல் தொகுப்பில் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர் தற்கொலை.. திமுக நஞ்சுக்கொடி பரவ விடக்கூடாது... நயினார் கடும் கண்டனம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share