உங்க REPORT CARD வாக்குறுதி என்ன ஆச்சு? சொல்லுங்க ஸ்டாலின்.. நயினார் சரமாரி கேள்வி..!
உங்க REPORT CARD வாக்குறுதி என்ன ஆனது என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக 2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அளித்திருந்தது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
திமுக அரசு தரப்பில், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 40 வாக்குறுதிகள் ஆலோசனை நிலையில் உள்ளதாகவும், சுமார் 80% நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற முக்கிய திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு வலியுறுத்துகிறது.
இதனிடையே, ஒவ்வொரு மாதமும் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டு, ஊடகங்களைச் சந்தித்து REPORT CARD வழங்குவேன் என்று தேர்தல் வாக்குறுதி எண் 491 என்ன ஆனது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதிகளைத் தயார் செய்ய குழு அமைப்பதில் தொடங்கி செயலி வெளியிடுவது வரை விளம்பர நாடகங்கள் நடத்த நேரமிருக்கும் தங்களுக்கு நிறைவேற்றிய வாக்குறுதிகளையும் மாதந்தோறும் சாதனை அறிக்கையையும் வெளியிட நேரமில்லையா என கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆண்களுக்கும் இலவச பயணமா? ஏற்கனவே மகளிரை அசிங்கப்படுத்தியது போதாதா? கொந்தளித்த சீமான்..!
தாங்கள் காற்றில் பறக்கவிட்ட வாக்குறுதிகளையெல்லாம் கண்டுபிடிக்கவே தனி ஆணையம் அமைக்க வேண்டியிருக்கும் நிலையில் எங்கிருந்து மாதமாதம் சாதனை அறிக்கையை வெளியிட முடியும் என்றும் சாடினார். வாக்குறுதிகளை மறந்து வஞ்சகம் செய்த திமுக அரசைத் தமிழக மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: உழவர் திருநாளில் ஊற்றிக் கொடுத்த திமுக..! பண்டிகை காலத்தில் சாராய விற்பனை..! உறுத்தலாயா? நயினார் விளாசல்..!