அலறும் தமிழ் பெண்கள்..! கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா..? திமுகவை புரட்டி எடுத்த நயினார்..!
மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியை போதை ஆசாமிகள் பட்டாகத்தியால் வெட்டிய சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி ஒருவர் மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த கஞ்சா போதை கும்பல் அவரை பட்டாக்கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கொந்தளித்த உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மீது கஞ்சா போதையில் இருந்த கும்பல் பட்டாக்கத்தியால் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றது என்று தெரிவித்துள்ளார். படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண், முழு மன மற்றும் உடல் நலத்துடன் கூடிய விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக கூறினார்.
"போதையில்லா தமிழகம் உருவாக்குவோம்” என்று உறுதிமொழி எடுத்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலினின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில், தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கும், பெட்டிக்கடைதோறும் கஞ்சாவும் பெருகியுள்ளது என்றார். தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் பெண்களின் பாதுகாப்பு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளது.ஆனால், திமுக அரசோ கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்று விளம்பர விழா எடுத்துக் கொண்டிருக்கிறது என்று சாடியுள்ளார்.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்புக்கு விஜய் கண்டனம்..!! மத்திய அரசின் பாரபட்ச நடவடிக்கை..! குற்றச்சாட்டு..!!
பெண்களைத் தரக்குறைவாக விமர்சிப்பவர்களையும், பாலியல் ரீதியாக வேட்டையாடுபவர்களையும் தனது கட்சி நிர்வாகிகளாக அமர்த்தி அழகு பார்க்கும் திமுகவிடம் பெண்களின் பாதுகாப்பையும் பெண்களுக்கான மரியாதையையும் எதிர்பார்க்க முடியுமா என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திமுகவைத் தமிழக அரசியலில் இருந்து ஒழித்தால் மட்டுமே பெண்களின் பாதுகாப்பு நிலைநிறுத்தப்படும் என்றும் உறுதிப்படத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை.! தென் மாநிலங்கள் குரல் அழுத்தப்படும் அபாயம்..! ப.சிதம்பரம் எச்சரிக்கை..!!