24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றங்கள்.. வெட்கக்கேடு விஜய்..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!.
தமிழகத்தில் நடந்துள்ள பாலியல் குற்றங்களை சுட்டிக்காட்டி முதல்வர் விஜய்யை நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
வெள்ளித்திரையைத் தாண்டி வெளியுலகத்திற்கு வாருங்கள் என்று முதல்வர் விஜய் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்து உள்ளார். நேற்று ஒருநாளில் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தைகள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவி, கர்ப்பிணி பெண், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட 12 பேருக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதும் அதில் 3 வயது குழந்தை அநியாயமாக இறந்து போனதும் பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா? இன்று முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பினார்.
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் எனில், உங்கள் ஆட்சியில் சராசரியாக 2 மணி நேரத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு என்று சாடினார்.
இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உங்களுடன் திரையில் நடித்த நடிகர், நடிகைகளையும், உங்களை வைத்து திரைப்படம் இயக்கிய இயக்குநர்களையும் வரிசையாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது தான் உங்கள் மாற்று அரசியலா முதல்வரே என்று கேட்டுள்ளார். தினசரி பல சினிமா பிரபலங்களை சந்திக்கும் நீங்கள், உங்கள் ஆட்சியில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை இதுவரை நேரில் சென்று சந்திக்காதது ஏன்? என்றும் பாதிக்கப்பட்டவர்கள் பனையூருக்கு வந்தால் தான் உங்கள் தரிசனம் கிடைக்குமோ? எனவும் சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் பாஜக தலைவர்கள்..! பிரதமர் மோடியின் சாதனை நூல்கள் வழங்கிய நயினார்..!
முதல்வரான பின்னும் நடிகர் மனநிலையிலேயே தொடரும் உங்கள் பந்தாவிற்கு, எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எதற்கு பலியாக வேண்டும்? என சாடியுள்ளார். உங்களை நம்பி வாக்களித்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால், பதவி விலகுங்கள் என்று முதல்வர் விஜயை சாடினார்.
இதையும் படிங்க: இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..? தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!