பாவம் சும்மா விடாது...! புத்தாண்டில் தூய்மை பணியாளர்களை தவிக்க விட்ட ஸ்டாலின் அரசு... நயினார் கண்டனம்..!
புத்தாண்டில் திக்கு தெரியாமல் தூய்மை பணியாளர்களை தவிக்க விட்ட பாவமே திமுகவை துரத்தி அடிக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன. இருப்பினும் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சமத்துவம் பொங்கட்டும் என சமூக வலைதளத்தில் பேசிவிட்டு, சமூகநீதியை வீசியெறிந்து, சர்வாதிகாரப்போக்கில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபடுவதாகவும் பாசிச முதல்வர் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார். புத்தாண்டை வாணவேடிக்கையுடன் உலகமே கொண்டாடிய வேளையில், அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி இருளில் அடைத்து வைத்ததோடு, நள்ளிரவில் திக்குத் தெரியாத இடத்தில் இறக்கிவிட்டு கொடுமைப்படுத்தி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று கூறினார்.
இதையும் படிங்க: திமுக மறதிக்கு கடலோர மக்கள் பதிலடி காத்திருக்கு... நயினார் விமர்சனம்...!
பணிநிரந்தரம் செய்வோம் என்று கூறிய உங்கள் தேர்தல் வாக்குறுதி எண் 285 தான் மறந்துவிட்டது என்றால், தூய்மைப் பணியாளர்கள் மனிதர்கள் என்பது கூடவா உங்கள் திராவிட மாடல் அரசிற்கு மறந்துவிட்டது என்று நயினார் நாகேந்திரன் கேட்டு உள்ளார். ஒன்றை நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்., புத்தாண்டில் திக்குத் தெரியாமல் தூய்மைப் பணியாளர்களைத் தவிக்கவிட்ட பாவமே, திமுக அரசை திக்குத் தெரியாமல் துரத்தியடிக்கும் தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரே திமுக அரசை அழிக்கும் என்றும் நயினார் கடுமையாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: 17 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு... இனிமேதான் எங்க ஆட்டம் இருக்கு... நயினார் உறுதி...!