எல்லாத்தையும் கொன்னுட்டு... "வெல்வோம் ஒன்றாக" வேற..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!
கஞ்சா புழக்கம் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கிய பின்னர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் புழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக முன்னிறுத்தி, திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு தோல்வி, இளைஞர்களை பாதிக்கும் போதைப் பழக்கத்திற்கு ஆளுங்கட்சி மறைமுக ஆதரவு என்று குற்றஞ்சாட்டுகின்றன.
எதிர்க்கட்சிகளின் முதன்மையான குற்றச்சாட்டு, திமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை எங்கும் நடப்பதாகவும், பள்ளி, கல்லூரி அருகே கூட கஞ்சா கிடைப்பதாகவும், இதனால் இளைஞர்களிடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறி உள்ளது. இந்த நிலையில், கஞ்சா மயத்தால் தமிழகத்தை திமுக அரசு கொலைக்களமாக்கி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பெரும்பத்து பகுதியில் கஞ்சா போதையில் 6 இளைஞர்கள் டீக்கடையில் இருந்த இரண்டு பேரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்றும் கடந்த ஐந்தாண்டுகளாக நகரங்கள், கிராமங்கள் என்ற வித்தியாசமின்றி திக்கெட்டும் கஞ்சா புழக்கம் அதிகரித்து, தமிழக இளைஞர்களின் வாழ்வைச் சீரழிப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சிதைத்து வருவது கொடூரமானது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமரின் பொம்மையை தூக்கில் தொங்கவிட்ட காங்கிரசார்..!! நயினார் கண்டனம்..!!
தனது திறனற்ற நிர்வாகத்தால் எங்கு பார்த்தாலும் கஞ்சா மயமாக்கி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும் மக்கள் நலனையும் ஒருசேர கொன்றுவிட்டு, 'வெல்வோம் ஒன்றாக' என்று திமுக அரசு சூளுரைப்பது வெட்கக்கேடானது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் வந்தபோது போராட்டத்தை தூண்டி வேடிக்கை பாக்குதா திமுக? கொந்தளித்த நயினார்..!!