×
 

பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சி..! புகழ்ந்த தள்ளிய நயினார் நாகேந்திரன்..!!

பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சி என்று நயினார் நாகேந்திரன் புகழ்ந்து பேசினார்.

பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சி உழவர்களின் வாழ்வில் ஒளியேற்றி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். "சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்" என்ற ஐயன் வள்ளுவரின் வாய்மொழிக்கு இலக்கணமாகத் திகழும் உழவர் பெருமக்களின் வியர்வையை முத்தாக மாற்றி, வாடி நின்ற வயல்வெளிகளை எல்லாம் பொன் விளையும் பூமியாக மாற்றிய பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சாரும் என்று கூறியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகால சீர்திருத்தங்களால் அவர்களின் வாழ்வில் புதிய ஒளியேற்றி, விவசாயத்தைத் தேசத்தை இயக்கும் பேராற்றலாக மாற்றிய நமது பிரதமரின் சாதனைகளைப் போற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 'விதை முதல் சந்தை வரை' என்ற விரிவான கொள்கையின் கீழ், 'இ-நாம்' போன்ற மின்னணு சந்தைகள் மூலம் இடைத்தரகர்களின் சுரண்டல் ஒழிக்கப்பட்டு, விநியோகச் சங்கிலி சீரமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மண்வள அட்டை மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கும் நவீன அறிவியல் பயிர் வகைகளைப் புகுத்தியதன் மூலமாக, விவசாயத்தை நலிவடைந்த நிலையில் இருந்து மீட்டு, உலகத் தரம் வாய்ந்த, போட்டித்திறன் மிக்கத் துறையாக மாற்றி பிரதமர் மோடி அசத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: இருளில் மூழ்கிய குமரி திருவள்ளுவர் சிலை..! தவெக அரசின் சாதனை..? வலுக்கும் கண்டனம்.!!

விவசாயிகள் மட்டுமன்றி, மீனவர்களின் வாழ்வையும் மேம்படுத்த 'பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்' மற்றும் வேளாண் ஸ்டார்ட்-அப்கள் மூலம் உலக அரங்கில் நமது உழவர்களை பிரதமர் மோடி தலைநிமிரச் செய்து இருப்பதாகவும், இந்த 12 ஆண்டுகால சாதனைகளையும், அவரது புகழையும் நாடெங்கும் கொண்டு சேர்ப்போம் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: "விஜய் எனும் பொம்மையை பாருங்க"... இது "துரோக சக்தி"..! நயினார் சரமாரி விளாசல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share