×
 

அவசர சிகிச்சைப் பிரிவில் அரசு மருத்துவத்துறை..! நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!

அரசு மருத்துவத்துறை அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அரசு மருத்துவத்துறை இருப்பதாகவும் முதல்வர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தவெக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், தமிழகத்தின் அரசு அதிகாரிகள் மற்றும் விஐபி-க்கள் அனைவரும் அரசுப் பொது மருத்துவமனைகளில் நம்பிக்கை வைத்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என்று, கேட்டுக்கொண்டுள்ளார்., இது வரவேற்கத்தக்கது என்றார்.

என்றாலும், இது வெறும் வாய்மொழியாகவும், வேண்டுகோளாகவும் இல்லாமல், தமிழக அரசின் உத்தரவாக இருக்குமேயானால், தமிழகத்தின் மருத்துவத்துறை பெரும் ஏற்றத்தையும், புது மாற்றத்தையும் பெறும் என்பது மறுக்க முடியாத உண்மை. முந்தைய காலகட்டங்களில், தமிழகத்தில் அரசு பொது மருத்துவமனைகள் தான் ஆபத்பாண்டவனாக இருந்தன. இன்றைய புற்றீசல் போல, அன்றைக்கு தனியார் மருத்துமனைகள் இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாகதான் இருக்கும். அதுவும் அந்த தனியார் பொது மருத்துமனைகளில் சிகிச்சை எடுப்பவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், அரசு பொது மருத்துவமனைகளுக்குதான் அனுப்புவார்கள். அங்கே அவசரப் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உரிய சிகிச்சை எடுக்கப்பட்டு உயிர் பிழைப்பார்கள். இதுதான் உண்மை என்று தெரிவித்தார்.

முக்கியத் தலைவர்களான அண்ணா, திரு காமராஜ், கக்கன், கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து நலம்பெற்ற உதாரணங்கள் உண்டு என்றும் இன்றைய அரசு பொது மருத்துவமனைகளின் நிலையோ பரிதாபகரமாக இருக்கிறது. உருக்குலைந்த கட்டிடங்கள், சீரழிந்த சுகாதாரம், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் நோயாளிகள் பரிதவிக்கும் நிலை. இவைகள்தான் இன்றைய அரசு மருத்துவமனைகளின் அவல நிலை அடையாளங்கள் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: மகாராஷ்டிராவை பார்த்து கத்துக்கோங்க விஜய்..! முதல்வருக்கு நயினார் அறிவுறுத்தல்..!!

ஆகவே, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்  மக்களிடம் அளித்த மருத்துவ வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்மென்றும், பொது மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி, அவசர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் அரசு மருத்துவதுறையை காப்பாற்றி தமிழக மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய தவெக நிர்வாகிகள்... வெளுத்து வாங்கிய நயினார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share