×
 

திருப்பரங்குன்றம் தீபத்தூண்... சர்ச்சையை கிளப்பிய அமைச்சரின் கருத்து..! நயினார் சரமாரி கேள்வி..!!

அமைச்சர் நிர்மல் குமார் கருத்தை முதல்வர் விஜய் ஆமோதிக்கிறாரா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் நிர்மல் குமாருக்கு கண்டனம் வலுத்து வருகிறது. தவெக அமைச்சரின் இந்து விரோத கருத்தை ஆமோதிக்கிறாரா முதல்வர் விஜய் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும், "திருப்பரங்குன்றம் விஷயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறையையே கடைபிடிப்போம்" என்று தவெக அமைச்சர் நிர்மல் குமார் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.

மாற்று சக்தி என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, இந்து விரோத திமுகவின் சதிச் சுவடுகளையே பின்பற்றுவோம் என்று இன்று தவெக அமைச்சர் அறிவித்திருப்பது, தவெக ஒரு ஏமாற்று சக்தி என்பதையே நிரூபிக்கிறது எனவும் தெரிவித்தார். இந்து மக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்க முயலும் அமைச்சரின் இந்தக் கருத்தை தமிழக முதல்வர் விஜய் ஆமோதிக்கிறாரா..? என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: கூண்டோடு விலகல்... நயினார் தலையில் இறங்கியது பேரிடி... கோட்டையை கோட்டை விட்ட தமிழக பாஜக...!

இந்துக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்கும் விதமாக, உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்க போகிறாரா? என்றும் தீய சக்தி திமுகவுக்கும் "தூய சக்தி" தவெகவுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறாரா? எனவும் சரமாரி கேள்விகளை முன் வைத்தார். முதல்வர் விஜய் வழக்கம்போல இதற்கும் வாய் திறக்காமல் இருப்பதை விடுத்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவது குறித்த தவெக அரசின் நிலைப்பாட்டைத் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: "717 டாஸ்மாக் கடைகள் உண்மையில் மூடப்பட்டதா...?" தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share