ஊழல் கோட்டை திமுக... அழிவு காலம் வந்துடுச்சு... கொந்தளித்த நயினார்..!!
ஊழல் கோட்டையாக விளங்கி வரும் திமுகவின் அழிவு காலம் நெருங்கி விட்டது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருக்கும் கே.என்.நேருவின் துறையில் பணி நியமனம் தொடர்பான ஒரு பெரிய ஊழல் குற்றச்சாட்டு கடந்த ஆண்டு முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது லஞ்சம் பெறப்பட்ட மோசடி குற்றச்சாட்டு. நீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி எதிர் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஊழல்கோட்டை திமுகவின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 10% வரை லஞ்சம் பெற்று 1,020 கோடி ரூபாய் ஊழல் புரிந்த புகாரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு மீது வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சர் நேரு, அரசு வேலையை விற்று ₹888 கோடி ஊழல் புரிந்த புகார் மீதும் கூடிய விரைவில் வழக்கு பதிந்து, உண்மை வெளிக்கொணரப்படும் என்னும் நம்பிக்கையை இந்த நீதிமன்ற உத்தரவு ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அரச்ச மாவையே அரைக்கும் பட்ஜெட்..!! DMK ALL FAIL... நயினார் விளாசல்..!!
மொத்தத்தில், மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சி, கமிஷனில் கொளுக்கும் ALL FAIL திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும் நாளுக்கான Countdown இன்றோடு தொடங்கிவிட்டது என்று தெரிவித்தார். கூடிய விரைவில், திமுக உடன்பிறப்புகளின் ஒட்டுமொத்த ஊழலும் நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்டு, தமிழக மக்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சமூக நீதியைக் காப்பாற்றும் திராவிட மாடல்..! நிதி தராமல் அலைக்கழிக்கும் பாஜக... அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!