அராஜக ஆட்சிக்கு அழிவு காலம் நெருங்கிடுச்சு! கொந்தளித்த நாயனார் நாகேந்திரன்..!
திமுக அரசின் இந்த அராஜக ஆட்சியின் இறுதி காலம் நெருங்கிவிட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டத்தட்டமாக தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மாவட்டம் செங்கம் பகுதியில் துணை முதலமைச்சர் கலந்து கொண்டு திமுக பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் உட்பட 10 பேர் மீது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் எடப்பாளையம் பகுதியில் திமுகவின் கொடிக்கம்பம் சரிந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த இரு சம்பவங்களை சுட்டிக்காட்டிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை சாடியுள்ளார். திமுக-வின் அலட்சியத்தால் திருவண்ணாமலையில் உயிர்பலி எதுவும் நிகழவில்லை என்பது தான் தற்போதைய ஒரே ஆறுதல் என்றும் அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் “சாரி” என்ற வார்த்தையைக் கூறி முதலமைச்சர் ஸ்டாலின் சமாளித்து விடுவார் என்றும் விமர்சித்தார்.
காரணம், வெற்று விளம்பரங்களுக்கு பெயர்போன திமுக ஆட்சியில், திமுக-வின் கொடிக் கம்பங்களாலும், திமுக தலைவர்களின் கட்-அவுட்களாலும் நடக்கும் விபத்துகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது இது ஒன்றும் முதன்முறையல்ல. ஆனால், சுயநல மாடல் அரசுக்கு தங்களை நம்பி ஓட்டுப் போட்ட மக்களின் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையுமில்லை என்று கூறினார்.
சாலையோரங்களில் வைக்கப்படும் கொடிக் கம்பங்களுக்கு 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும், சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் கொடிக்கம்பங்கள் நடக்கூடாது எனவும் மாண்பமை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஆளும் அரசு தங்கள் இஷ்டத்திற்கு நினைக்கும் இடங்களிலெல்லாம் கொடிக் கம்பங்களை நட்டு வைத்துக் கொண்டும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி நிகழ்ச்சியை நடத்திக் கொண்டும் நாட்டாமை செய்வது கண்டனத்திற்கு உரியது என்றும் அறிவாலய அரசின் இந்த அராஜக ஆட்சியின் இறுதி காலம் நெருங்கிவிட்டது என திட்டத்தட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராபர்ட் ப்ரூஸ் வெற்றியை எதிர்த்த வழக்கு... குறுக்கு விசாரணைக்கு ஆஜரான நயினார் நாகேந்திரன்!
இதையும் படிங்க: சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்.. பாஜக தொண்டர் பேச்சால் அதிர்ந்து போன நயினார்!