×
 

விஜயை சீண்டிய நயினார்..! அம்மா விவகாரத்தில் அமைச்சர் அருண் ராஜ் கொடுத்த பதிலடி!!

முதல்வர் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி கொடுத்தார்.

தமிழக அரசியல் வெளியில் மீண்டும் ஒரு சர்ச்சை தலைப்பை உருவாக்கியிருக்கிறது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் சமீபத்திய பேச்சு. முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் தொடர்பாக அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அநாகரீகமானவை என பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேச்சுக்கு தமிழக அரசின் அமைச்சர் அருண்ராஜ் உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் நயினார் நாகேந்திரன் இயலாமையில் பேசுவதாகக் குறிப்பிட்டு, தங்கள் கட்சியும் அரசும் செயல்கள் மூலமே பதிலளிக்கும் என உறுதியாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சர்ச்சை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய ஒரு கருத்தை மையமாகக் கொண்டு எழுந்தது. சட்டப்பேரவையில் பேசும்போது முதலமைச்சர் ஒரு சூழலில் “அப்பாவை காணோம்” என்ற தொனியில் ஒரு கருத்தை முன்வைத்தார்.

அந்தப் பேச்சுக்குப் பதிலளிக்கும் விதமாக நயினார் நாகேந்திரன் பேசியபோது, “சட்டப்பேரவையில் போய் அப்பா எங்கே, அப்பா எங்கே என்று தேடினால் எப்படித் தெரியும்? வீட்டிற்குப் போய் அம்மாவிடம் கேட்டால்தான் அப்பா யார் என்று தெரியும்” என்று கூறினார். இந்த வார்த்தைகள் முதலமைச்சரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகப் பலரும் விளக்கினர். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி தனிப்பட்ட குடும்ப விஷயங்களை, குறிப்பாகத் தாயை இணைத்துப் பேசுவது அநாகரீகமானது என்ற கருத்து பரவலாக எழுந்தது.

இதையும் படிங்க: முதலமைச்சர், அவரது தாயார் குறித்து அநாகரிக பேச்சு..! சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்..!!

நயினார் நாகேந்திரன் பாஜகவின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழக அரசு மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். ஆனால் இந்த முறை அவரது பேச்சு அரசியல் எல்லைகளைத் தாண்டி தனிப்பட்ட தளத்திற்குச் சென்றுவிட்டதாக எதிர்க்கட்சியினரும் ஆளும் கட்சியினரும் கருதுகின்றனர். 

இந்த நிலையில் நைனா நாகேந்திரன் பேச்சுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். மக்கள் தங்களை கவனிக்க வேண்டும் என நினைத்து நைனார் நாகேந்திரன் பேசுவதாகவும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும் கூறினார். நயினார் நாகேந்திரன் அநாகரீகப் பேச்சுக்கு செயல்கள் மூலம் பதிலடி கொடுக்கும் என்று உறுதிப்பட தெரிவித்தார். 

இதையும் படிங்க: மீண்டும் பாஜகவுக்கு ரிட்டன்.. 25 முக்கிய நிர்வாகிகள் அதிரடி முடிவு.. சைலண்ட்டாக சம்பவம் செய்த நயினார்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share