×
 

களமாட காத்திருக்கும் பாஜக.. நயினாரின் சூறாவளி சுற்றுப்பயணம்! பாஜக தொண்டர்கள் செம குஷி..!

ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலத்தின் அரசியல் களம் பரபரப்பாகவும் பரந்த அளவிலான மக்கள் தொடர்பு முயற்சிகளால் சூடுபிடித்தும் உள்ளது. முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சிகளின் செல்வாக்கை வலுப்படுத்தவும், மக்களின் ஆதரவைப் பெறவும், தேர்தல் வியூகங்களை வலுவாக்கவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சுற்றுப்பயணங்கள் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமானவை, ஏனெனில் இவை மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்வதற்கும், தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்துவதற்கும் உதவுகின்றன. 

2026-ல் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மாநிலம் முழுவதும் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் மாபெரும் சுற்றுப்பயணத்தை கோயம்புத்தூரில் உள்ள மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார். 

இதையும் படிங்க: மீண்டும் ஓபிஎஸை கூட்டணிக்குள் இணைக்க திட்டமா? - சற்றும் யோசிக்காமல் நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்...!

இவரைத் தொடர்ந்து, மக்கள் உரிமை அமைப்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்ற மக்களை சந்தித்து உரையாடும் அன்புமணி, திமுக அரசு தொடர்பாக விமர்சனங்களை எடுத்துரைத்து வருகிறார். 

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அன்புமணியை தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த முறை தனது சுற்றுப்பயணம் வேறு மாதிரி இருக்கும் என்று பேசி இருந்த பிரேமலதா, மக்களிடம் சூறாவளி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார்.

2026 சட்டமன்ற தேர்தலில் நோக்கமாகக் கொண்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் நடத்தி வரும் சூழ்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் தனது சுற்றுப்பயணத்தை வரும் 17ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஆழமாக பாலுன்ற நினைக்கும் பாஜக அதிமுகவுடன் கூட்டணியை அமைத்துள்ளது. தங்களுக்கான நிரந்தர இடத்தை பிடிக்கும் நோக்கத்தின் தமிழகத்தில் அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது பாஜக.

இதன் ஒரு பகுதியாக தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நெல்லையில் இருந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை அவர் தொடங்குகிறார்.

இதையும் படிங்க: என்மேல தப்பு இல்லங்க... மறுக்கும் நயினார்! ஆதாரத்தை காட்டிய ஓபிஎஸ்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share