×
 

மத்திய அரசை குறைச்சொல்லும் ஊழல் பெருச்சாளிகள்... திமுகவை விளாசிய நயினார்..!

திமுக அரசை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சற்று வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் பட்டியலை வெளியிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார். வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு சொன்னீர்களே செய்தீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார். இந்த நிலையில் பூங்கா, மருத்துவமனை போன்ற வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வில்லை என்றும் அவற்றை செய்தீர்களா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார். 

இந்த நிலையில், தமிழ்நாட்டின் கடன் சுமையை இறக்கி பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறிய வாக்குறுதி என்ன ஆனது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். விளம்பரத்திற்காகப் பெயருக்கு ஒரு குழு அமைத்துவிட்டால் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றியதாகிவிடுமா என்றும் குழு அமைத்த பின்னும் தமிழகத்தின் கடன் ரூ. 9.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதே, இதற்கு என்ன பதில் எனவும் கேட்டுள்ளார்.

கொடுத்த வாக்குறதியை எப்போதும் காற்றில் பறக்கவிடுவது போல, தாங்கள் அமைத்த குழுவின் பரிந்துரைகளையும் காற்றோடு காற்றாகப் பறக்கவிட்டுவிட்டீர்களா என்றும் நயினா கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: "சாரை சாரையாய் தவெகவில் இணையப் போறங்க" - அதிமுக + பாஜகவிற்கு ஷாக் கொடுத்த செங்கோட்டையன்...!

ஒட்டுமொத்த அரசு கஜானாவையும் ஊழல் பெருச்சாளிகள் மூலம் சுரண்டித் தின்றுவிட்டு, மீதமிருக்கும் பணத்தை வெற்று விளம்பர படப்பிடிப்புக்காக வழித்து காலியாக்கிவிட்டு, மக்கள் கேள்வி எழுப்பும்போது மட்டும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என நீலிக்கண்ணீர் வடித்து மடைமாற்றும் திமுக அரசை விரைவில் தமிழக மக்கள் வீசியெறிவார்கள் என்றும் சாடியுள்ளார்.

இதையும் படிங்க: நல்லது நினைச்சிருந்தா தமிழ்நாடு நாசமாகி இருக்குமா... சாடிய நயினார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share