×
 

ஸ்டாலின் ஆட்சியின் வாக்குறுதி என்னாச்சு? முதல்வருக்கு நயினார் சரமாரி கேள்வி...!

தேர்தலில் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டு அவ்வப்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்விகளை முன் வைத்து வருகிறார்.

அதன்படி ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கொடுத்த வாக்குறுதி தொடர்பாக நயினார் நாகேந்திரன் கேள்வியை முன் வைத்துள்ளார். ஊக்கத்தொகை தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ் பண்பாட்டு உணர்வுடன் பல்லாயிரக்கணக்கானோர் வெகுண்டெழுந்து போராடியதன் விளைவாக, ஜல்லிக்கட்டு தடையை நீக்க மாபெரும் அரணாக நின்றவர் பிரதமர் மோடி என்று குறிப்பிட்டார். ஆனால், பரம்பரை பரம்பரையாகத் தமிழை வைத்துத் தமிழர்களைச் சுரண்டி ஆட்சியைப் பிடித்த நீங்களோ, ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்தும் ஜல்லிக்கட்டிற்கான வாக்குறுதியை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளீர்களே, இதுதான் உங்கள் தமிழினப் பாசமா என்று கேட்டார். 

இதையும் படிங்க: இது பெண்களுக்கான அரசா? கூச்சமா இல்லையா? வெட்கப்படுங்க ஸ்டாலின்! EPS காட்டம்...!

கடந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகையைப் பதுக்கிவிட்டீர்கள், மாடுபிடி வீரர்களுக்கான ஜல்லிக்கட்டு பரிசுத் தொகையையும் நிறுத்திவிட்டீர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கான ஊக்கத்தொகை குறித்து இன்றுவரை வாய்திறக்க மறுக்கிறீர்கள், ஆக தமிழ் மொழியையும் தமிழர் உணர்வையும் திமுக வெறும் அரசியல் கருவியாக மட்டுமே பார்க்கிறது என்பது தானே இதில் பொதிந்துள்ள உண்மை என்று கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: 2026 மிஸ் ஆகவே கூடாது... வேலை தரமா இருக்கணும்..! திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share