திமுகவுக்கு நாள் குறிச்சாச்சு... இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்... பந்தாடிய நயினார்...!
திமுக ஆட்சியின் நாட்கள் குறையும் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் தலை நிமிர தமிழகத்தின் பயணம் என்ற தலைப்பில் முதல் நிகழ்ச்சியாக மதுரை கைத்தறி நகர் பகுதியில் கிராம பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அதிமுக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக சுற்றுப்பயணத்தின் முதல் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற உள்ளது என்றும் நாளையில் இருந்து சிவகங்கை செங்கல்பட்டு சென்னை போன்ற இடங்களில் சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது எனவும் கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்., அதனைத் தொடர்ந்து நாங்களும் தற்போது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி தலைவர்கள் பேச இருக்கிறார்கள் என்றும் நாங்கள் கிராமம் கிராமங்களாக சென்று மக்களின் குறைகளை கேட்டு தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையாக தயார் செய்வதற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறோம் எனவும் தெரிவித்தார். பணம் ஒன்றே குறிக்கோளாக பார்க்கும் ஆட்சி வெகு விரைவில் அகற்றப்பட வேண்டும் என்றும் அதற்கான முகூர்த்த நாள் இன்று குறிக்கப்பட்டு பிரச்சாரம் இன்று ஆரம்பிக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சபாநாயகர் அப்பாவு மகனுக்கு முக்கிய பொறுப்பு... திமுக தலைமை அதிரடி அறிவிப்பு...!
திமுக பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் 50 சதவீதம் சிறுமி மீதான பாலியல் குற்றங்கள் 283 சதவீதம்., லாக்கப் டெத் 24 நடந்துள்ளது சொல்ல முடியாத துயரத்தில் மக்கள் இருக்கிறார்கள் என பேசிய நயினார், காவல்துறையை முதல்வர் கையில் வைத்துள்ளார் ஆனாலும் தினம் தினம் படுகொலை., கிட்னி முறைகேடு வழக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை. எல்லாமே திமுக தான் என்றார்.
இன்று முதல் கவுண்டன் ஸ்டார்ட் ஆகிறது., நாட்கள் குறிக்கப்படுகின்றது., திமுக ஆட்சியின் நாட்கள் குறைக்கப்படுகிறது எனவும் கூறினார். டிடிவி தினகரன் எங்களது கூட்டணியில் இருந்தவர்தான்., கூட்டணியின் வரும்போது ஒவ்வொருவரின் ஐடியாவை கேட்டுவிட்டு செய்ய முடியாது என கூறினார்.
இதையும் படிங்க: அறிவாலயம் வாட்ச்மேன் டிடிவி! இபிஎஸ் பற்றி பேச என்ன அருகதை இருக்கு? கொந்தளித்த அதிமுக