×
 

தமிழ்நாட்டுப் பெண்கள் தாலி அறுக்க பாக்குறீங்களா ஸ்டாலின்? டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் தாக்கு..!

தமிழ்நாட்டுப் பெண்களின் தாலி அறுக்க பார்ப்பது முறையா என நயினார் நாகேந்திரன் கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்றதாக கூறி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்றும் ஊற்றிக் கொடுத்து உயிரைப் பறிக்கப் பார்க்கும் டாஸ்மாக் மாடல் அரசு இன்று கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

மேலும் தமிழகப் பெண்களின் தாலி அறுக்க பார்ப்பது முறையா எனவும் கடுமையாக சாடினார். குடியரசு தின விழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு, ஜனவரி 25-ஆம் தேதியே 220 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுவை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார்.

மதுவை விற்றதோடு நில்லாமல், ஜனவரி 26-ஆம் தேதியும் சட்டவிரோதமாகப் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் திமுக அரசு மது விற்பனை செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். கள்ளச் சாராயம் குடித்து பலர் பலியாவது ஒருபுறம் இருக்கையில், டாஸ்மாக் மதுவைக் குடித்து இறந்த சம்பவங்களும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் கள்ளச் சந்தையில் மறைமுகமாக விற்கும் இத்தகைய மதுபானங்களைக் குடித்து, ஏதாவது உயிர் பலி ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: விருதுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்! 77-ஆவது குடியரசு தினத்தை ஆளுநர் மாளிகையில் கொண்டாடிய முக்கியப் பிரமுகர்கள்.

பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் விற்று திமுகவின் கஜானாவை நிரப்பியது போதாதென்று, தற்போது தேர்தல் கைச்செலவுக்கு கல்லா கட்ட விடுமுறை நாட்களிலும் முறைகேடாக மதுவை விற்று, தமிழகப் பெண்களின் தாலி அறுக்கப் பார்ப்பது முறையா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாஜக டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை தொடர்பாக வெளியிட்ட வீடியோவை சுட்டிக்காட்டி நைனார் கருத்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: "கூட்டணிப் பேச்சு இல்லை, வெறும் தேநீர் தான்!" - சுதீஷ் சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share