விஜயுடன் கூட்டணியா? என்ன செய்ய போறீங்க? நயினார் நாகேந்திரன் சூசகம்...!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழக அரசியல் களத்தில் புதிய அலை என்னும் நிலையில் நடிகர் தளபதி விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதிலிருந்து திமுக ஆட்சியையும், அதன் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும், மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய், தனது திரைப்பட வாழ்க்கையிலிருந்து அரசியலுக்கு வந்த நிலையில், அவரது பேச்சுகள், பொதுக்கூட்டங்கள் என அனைத்தும் வரவேற்பை பெற்றன.
திமுக அரசியல் எதிரி என்றும் பாஜக கொள்கை எதிரி எனவும் அறிவித்து உள்ளார். இருப்பினும் கரூர் கோரச் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாகவே பாஜகவின் மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, கரூர் சம்பவத்திற்கான காரணத்தைத்தான் பார்க்க வேண்டும் என்றும் அந்த நிகழ்வில், விஜய்யின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்னவாகி இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார். டாஸ்மாக்கில் 10 ரூபாய் வசூல் தொடர்பாக விஜய் விமர்சனம் செய்தபோதே செருப்புகள் வீசப்பட்டதாகவும், அதனால் அவருடைய பாதுகாப்பு குறித்தும் நாம் யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “வெள்ளை சட்டை, ஸ்மார்ட் வாட்ச்” ... மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்த அண்ணாமலை... கலாய்க்கும் நெட்டிசன்கள்...!
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தாங்கள் இருப்பதாகவும், நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும் என்றும் தெரிவித்தார். அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார். விஜய் உங்களுடைய கூட்டணிக்கு வந்தால் இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு சிரித்துக் கொண்டே… பார்ப்போம் என்று கூறினார்.
இதையும் படிங்க: விஜய் மேல பழி போடாதீங்க... கரூர் சம்பவத்திற்கு கையாலாகாத திமுக அரசே காரணம்... எச்.ராஜா குற்றச்சாட்டு...!