×
 

"அவனை எங்களுக்கு காமிங்க"..! சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்...! கொந்தளித்த மக்கள்..!!

நாமக்கல்லில் சிறுமிகளுக்கு முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்த்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல்லில் 3 மற்றும் 12 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் அறிந்து ஆவேசமடைந்த சிறுமிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் வாக்குவாதம் செய்தனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகும். இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றமாகும். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது. 

இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மூன்று மற்றும் 12 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமிகளிடம் அத்துமீறிய 59 வயதான வரதராஜ் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் சிறுமிகளின் உறவினார்கள் கொந்தளித்து போராட தொடங்கினர். “அவனை எங்களுக்கு காமிங்க”... எனக் கூறி ஆவேசத்துடன் வாக்குவாதம் செய்தனர். 

இதையும் படிங்க: #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share