12 மணி முகாமிற்கு 4 மணிக்கு வந்த திமுக அமைச்சர்... வெளுத்து வாங்கிய கிராம மக்கள்...!
நாமக்கல்லில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பங்கேற்க வந்த திமுக அமைச்சர் தாமதம் செய்தததால் அப்செட்டான மக்கள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார், இந்த திட்டத்தின் மூலம் 13 முக்கியமான துறைகள் தொடர்பாக சேவை மற்றும் வசதிகளை மக்களிடையே கொண்டு செல்கின்றனர் ஊரக வளர்ச்சி, வருவாய் நகராட்சி நிர்வாகம், ஆதிதிராவிடர் நலம், சிறுபான்மையினர் நலம், சமூகநலம் மாற்றுத்திறனாளிகளின் நலம், மின்சாரம், பி எஸ் சி, எம் பி சி எஸ் மற்றும் எம்எஸ்எம்இ போன்ற துறைகள் அடங்குகின்றது.
தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்திற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 13 துறைகளுக்குமான பிரதிநிதிகள் ஒரே இடத்தில் இருக்கின்றனர், அதனால் மக்கள் தனிதனி துறை அலுவலங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம் இந்த முகாமில் சேவை கோரிக்கைகளை மற்றும் புகார்கள் அரசியல் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: வடமாநிலங்களில் 21 விமான நிலையங்கள் 10ம் தேதி வரை மூடல்.. என்ன காரணம்?
அந்த வகையில் நாமக்கல்லில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நண்பகல் 12 மணி அளவில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஏராளமான மக்கள் முன்னதாகவே வந்து காத்திருந்தனர். ஆனால் அமைச்சர் மதிவேந்தன் மாலை 4 மணிக்கு கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த விவசாயி ஒருவர் 12 மணி கூட்டத்திற்கு 4 மணிக்கு வருகிறீர்களே இது நியாயமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் ரொம்ப கூலாக வரும் வழிகளில் மக்களை எல்லாம் சந்தித்து மனுக்களை வாங்கி, அந்தந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுவிட்டு வர தாமதமாகிவிட்டது என பதிலளித்தார். அதற்கு அந்த விவசாயி, தாமதம் ஆகும் எனத் தெரிந்தால் எங்களுக்கு உணவு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். காலையில் இருந்து பச்சை தண்ணீர் கூட இல்லாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் சோகம்..! மலையில் விழுந்து சுக்குநூறான ஹெலிகாப்டர்.. பெண் உள்பட 6 பக்தர்கள் பலி..!