நாங்குநேரி பயங்கரத்தில் திடீர் திருப்பம்.. கண்காணிப்பு வளையத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்... வெளியானது முக்கிய எச்சரிக்கை....!
நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு சமூக வலைதளங்களில் தவறாக பரப்பிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் கடந்த 2 தேதி இரவு நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக, நாங்குநேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து , புலன் விசாரணையில், மேற்படி கொலை சம்பவத்தில் தொடர்புடைய 7 ஏழு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த குற்ற சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பிரிவினையை தூண்டும் விதமாக, வன்முறையான வார்த்தைகளை பயன்படுத்தி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்யும் நபர்கள் மீது தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. விஜயநாராயணம் மற்றும் நாங்குநேரி காவல் நிலையங்களில் மேற்படி குற்ற சம்பவம் சம்பந்தமாக, வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு , சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் வன்முறை மற்றும் பிரச்சினையை தூண்டும் வகையில் இதுபோல பிரச்சனைக்குரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பும் மற்றும் பதிவு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து நாங்குநேரி மற்றும் விஜயநாராயணம் பகுதிகளை சேர்ந்த சில இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: நாங்குநேரி வெறியாட்டம்... மேலும் ஒருவர் நிலை கவலைக்கிடம்..!! பதற்றம்..!!
அதில் முதல் கட்டமாக இரண்டு இளைஞர்கள் மோதல்களை தூண்டவகையில் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்டது கண்டறியப்பட்டது. முதல் கட்டமாக 2 பேர் மீது நெல்லை மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள் தீவிரமாக காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலின் தொடரட்டும்… சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்… நாங்குநேரி விஷயத்தில் தலையிட்ட விஜய்..!!