×
 

இழப்பை ஏளனம் செய்வதா? நயினார் மன்னிப்பு கேட்கணும்... நாஞ்சில் சம்பத் வலியுறுத்தல்..!

ஒரு இழப்பை ஏளனம் செய்வதா என நயினார் நாகேந்திரனுக்கு நாஞ்சில் சம்பத் கண்டனம் தெரிவித்தார்.

பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தும் பொதுக்கூட்டங்கள் தொடர்பாக மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் ஏதோ ஒரு உயிரிழப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்றும், அது அவர்களுக்கு நல்ல சகுனம் தானே என்றும் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, கரூரில் நடந்த ஒரு கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தையும், அதற்கு விஜய்யும் தமிழக அரசும் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார். 12 மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு 7 மணிக்கே வந்துவிடுகிறார்கள். கூட்டத்தில் தண்ணீர் கூட கொடுக்காமல் விடுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார். அதேபோல், சேலத்தில் நடந்த மற்றொரு கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததையும் நினைவூட்டி, எல்லா கூட்டத்திலும் யாராவது உயிரிழப்பது அவர்களுக்கு நல்ல சகுனம்தானே என்று சொன்னார்.

இந்தக் கருத்து வெளியான உடனேயே அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது. உயிரிழப்புகளை சகுனமாகப் பார்ப்பது மிகவும் உணர்ச்சியற்ற மற்றும் மனிதாபிமானமற்ற அணுகுமுறை என்று பலரும் விமர்சித்தனர். விஜய்யின் கட்சியினரும், பொதுமக்களும் இதை கடுமையாக எதிர்த்தனர். விஜய் கூட்டங்களில் உயிரிழப்புகள் நடந்தது நல்ல சகுனம்தானே என சிரித்துக்கொண்டே பேசிய நயினாருக்கு தமிழக வெற்றி கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அவரு அப்படி பேசுற ஆளு இல்லங்க..! இருந்தாலும்... நயினாருக்கு அறிவுரை சொன்ன TTV தினகரன்..!

பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரனின் பேச்சுக்கு தமிழக வெற்றி கழகத்தின் நாஞ்சில் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சியை கண்டு அஞ்சி தனது மனிதாபிமானமற்ற முகத்தை நயினார் வெளிப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். மரணத்தில் கூட அரசியல் லாபம் தேடும் கள்ளக் கூட்டணி மனநிலை அருவருக்கத்தக்கது என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அதிகாரம் மமதையில் இருப்பவர்களுக்கும் கமலாலயத்தின் கள்ளக் கூட்டணி தலைவர்களுக்கும் மனிதாபிமானம் என்னவென்றே தெரியாது என்றும் கூறினார். 

இதையும் படிங்க: நயினார் எல்லாம் ஒரு ஆளா? பாஜக- லாம் ஒரு கட்சியா? விஜய் பற்றிய விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share