“ஸ்டாலின் இதை மட்டும் செஞ்சிட்டா... பேசுறதையே நிறுத்திடுறேன்...” - சவடாலாய் சவால் விட்ட நாஞ்சில் சம்பத்...!
முதலமைச்சர் ஸ்டாலின் தனது கூட்டணியில் உள்ள 24 கட்சிகளின் பெயரை பார்க்காமல் சொல்லி விட்டால், நாஞ்சில் சம்பத் கூட்டத்தில் பேசுவதை விட்டு விடுகிறேன் என சவால்.
சென்னை புழல் அடுத்த ரெட்டேரியில் தவெக சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்க தெருமுனை கூட்டத்தில் அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: 24 கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது எனவும், அந்த கூட்டணியின் தலைவராக உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தனது கூட்டணியில் உள்ள 24 கட்சிகளின் பெயரை பார்க்காமல் சொல்லி விட்டால் நாஞ்சில் சம்பத் கூட்டத்தில் பேசுவதை விட்டு விடுகிறேன் என சவால் விடுத்தார். எங்கள் கட்சி தொடங்கிய போதே திமுகவிற்கு முடிவுரை துவங்கி விட்டது என்றும், எங்கள் கட்சிக்கு நிபந்தனை போடுகிறீர்கள், சீமானுக்கு, திமுகவிற்கு நிபந்தனை போட்டீர்களா என வினவினார்.
விமான பணிப்பெண்ணுக்கு கூட பாலியல் தொல்லை கொடுக்கும் திமுகவை ஆட்சியில் தொடர விடலாமா எனவும், சிறு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கயவனை குறைந்தபட்சம் கட்சியை விட்டு நீக்கினீர்களா என்றார். தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கு மிகுந்த சிரமம் உள்ளது எனவும், ரயில்வே நிர்வாகம் கவனிக்காமல் இருக்கலாம், தொகுதி எம்பி டி.ஆர்.பாலு என்ன செய்கிறார் என கேள்வி எழுப்பினார். அனைத்து துறைகளும் தமிழ்நாட்டில் தூர்ந்து விட்டது எனவும், திமுகவினர் அனைவரும் ஸ்டாலின் துதிபாடி, உதயநிதி துதிபாடி இறுதியில் டெட்பாடி ஆகிவிடுவார்கள் என்றார். திமுகவில் உதயநிதியை தவிர துணை முதல்வராக யாருக்கும் தகுதி இல்லையா எனவும் ஆகாயத்தை கூட ஒரு கூட்டம் வாங்க முயற்சிக்கிறது என்றார்.
இதையும் படிங்க: “அவர்களுக்கு பழக்கம் எங்களுக்கு வழக்கம்...” - ரைமிங்காக பேசி பாஜகவை விளாசிய நாஞ்சில் சம்பத்...!
தமிழ்நாடு நிதியமைச்சராக இருந்த பிடிஆர் மாப்பிள்ளையும், பிள்ளையும் 30லட்சம் கோடி குவித்துள்ளதாக கூறியதும், துறை மாற்றப்பட்டார் என தெரிவித்தார். இதை முடிக்க புறப்பட்ட வைகோ தோற்றுவிட்டார் எனவும், தேமுதிக அறிவாலயத்தில் அடங்கி விட்டது எனவும், கமலஹாசன் டார்ச்சை தொலைத்து விட்டார், சீமான் சரியில்லை எனவும், உங்களது நாட்கள் எண்ணப்பட்டு கொண்டுள்ளது எனவும், தமிழ்நாட்டில் கனிமொழியை பற்றி பேசுகிறீர்கள், ராணி வேலு நாச்சியார் குறித்து எப்போதாவது பேசினீர்களா என வினவினார். இந்திய வரலாற்றில் 3 ஆண்டுகள் கூட கடக்காத கட்சியில் ஒரே நாளில் 10000 விருப்பமனு விற்று தீர்ந்தன எனவும், இன்றே நலத்திட்ட உதவிகளை கொடுக்கிறோம், தேர்தல் அறிவித்தால் கொடுக்க முடியாது, இதனை அட்வான்ஸ் கொடுப்பதாக நினைக்க வேண்டாம் என்றார்.
நேரு மடிந்தார், 10 ஏக்கர் நிலத்தில் 10000லிட்டர் நெய் விட்டு தகனம் செய்யப்பட்டது எனவும், நாஞ்சில் சம்பத் மடிந்தால் 1லிட்டர் நெய் விட்டு கூட தகனம் செய்ய மாட்டார்கள் எனவும் சுடுகாட்டில் கூட சமதர்மம் இல்லை, வாக்குச்சாடியில் மட்டுமே சமதர்மம் உள்ளது எனவும், அதானி, அம்பானிக்கும் ஒரே ஒட்டு தான், சாமானியனுக்கும் ஒரே ஓட்டு தான் என்றார். பாக முகவர்கள் என்ற பெயரில் வாக்குச்சாவடிகளை திமுகவினர் சூறையாடுவார்கள், விஜயின் தம்பிகள் கவனமோடு பணியாற்ற வேண்டும் எனவும், தற்கொலை படை விஜய் கட்சியில் தான் உள்ளனர் எனவும், நடிகர் சிவாஜிகணேசன் ஓட்டையே கள்ள ஓட்டு போட்டவர்கள் தான் திமுகவினர் எனவும், மிகவும் எச்சரிக்கையாக இருந்து கண்காணிக்க வேண்டும் என்றார். தலைவர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகி விட்டார்கள், ஒரு நடிகன் தலைவனாகி விட்டான் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: டெல்லி போய் அமித் ஷா காலை...எடப்பாடி பழனிசாமியை விளாசித் தள்ளிய நாஞ்சில் சம்பத்...!