×
 

பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்கும் அதிமுக..! சரியான பாடம் காத்திருக்கு..! செல்வப் பெருந்தகை கண்டனம்..!

என்.டி.ஏ கூட்டணிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சாம, பேத, தான தண்டங்களைப் பயன்படுத்தி எப்படியாவது பா.ஜ.க.வை காலூன்ற வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அ.தி.மு.க.வை நிர்ப்பந்தப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கூட்டணி கட்சியினரின் முதல் அரங்கேற்றம் மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்றதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த கூட்டணிக்கு பெயர் அ.தி.மு.க. கூட்டணியா., தேசிய ஜனநாயக கூட்டணியா என்கிற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாத கூட்டணியாக இது அமைந்திருக்கிறது என்றும் இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை விமர்சிப்பதிலேயே தனது உரையின் பெரும் பகுதியை செலவழித்திருக்கிறார் என்று கூறினார். 

இந்தியாவிலேயே பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கிற ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் தமிழ்நாடு பா.ஜ.க.வையும், நரேந்திர மோடியையும் தொடர்ந்து எதிர்த்து வருவதற்கு நியாயமான காரணங்கள் நிறைய உள்ளன. இதனால் தான் 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்காமல் மக்கள் தோற்கடித்து பாடம் புகட்டினார்கள் என கூறினார்.

இதையும் படிங்க: NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு விடிவெள்ளி... ரெண்டு மாசம் தான் திமுகவுக்கு டைம்..! அன்புமணி அதிரடி..!

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தமிழர்கள் மீதும், தமிழ் மொழி மீதும் அக்கறையிருப்பதாக வேடம் போடுகிற நரேந்திர மோடி ஆட்சியில், 2014 முதல் 2025 வரை 84,000 மக்கள் மட்டுமே பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய தொகை ரூபாய் 2532.59 கோடி. ஆனால், செம்மொழித் தகுதி பெற்ற தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னக மொழிகளுக்கு வழங்கிய மொத்த தொகை ரூபாய் 147.56 கோடி எனவும் இதன்மூலம் தமிழுக்கு ஆண்டுக்கு சராசரியாக வழங்கிய தொகை ரூபாய் 11 கோடி மட்டுமே என்றும் செல்லப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.

தமிழைப் பற்றியோ,திருக்குறளைப் பற்றியோ பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதியிருக்கிறது என்று சாடிய செல்வப் பெருந்தகை தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் எத்தனைமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், மத்திய பா.ஜ.க. அரசின் தமிழ்நாடு விரோத போக்கிற்கு 2026 சட்டன்றத் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க: WELCOME BACK..! ஏன்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைந்த டிடிவி தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share