×
 

நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

நாளை நீட் மறு தேர்வு நடைபெறும் நிலையில், கண்காணிப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ அனுமதிக்கான மிக முக்கியமான தேர்வான NEET UG 2026, மே 3, 2026 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 22.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்றனர். ஆனால், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தக் கசிவு டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளை மையமாகக் கொண்டு இயங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மறு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே telegram போன்ற சமூக ஊடகங்களில் பரவியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் குழுக்களில் உறுப்பினர்கள் 400க்கும் மேல் இருந்ததாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நெட்வொர்க் செயல்பட்டதாக சந்தேகம் எழுந்தது. வினாத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, டெலிகிராம் வழியாக பணம் பெற்று பகிரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தக் கசிவு குறித்த புகார்கள் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் எதிரொலித்தன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மே 12, 2026 அன்று தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்தது. மத்திய அரசின் ஒப்புதலுடன் CBI விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நாடு முழுவதும் நீட் மறு தேர்வு நடைபெற இருக்கிறது.  நீட் மறு தேர்வு நடைபெறும் நிலையில் மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடைபெற இருப்பதால் கண்காணிப்பு பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் நீட் தேர்வுக்கான கண்காணிப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். 

இதையும் படிங்க: ஜூன் 21-ல் கூடுதல் புறநகர் ரயில்கள் இயக்கம்! நீட் தேர்வை முன்னிட்டு சென்னை கோட்டம் அறிவிப்பு!

தமிழகத்தில் நீட் தேர்வை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டவரை. இந்த நிலையில் நீட் தேர்வுக்கான தமிழகத்திற்கான மேலிட கண்காணிப்பு அதிகாரியாக மாலதி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதையும் படிங்க: இப்ப தொடுங்கடா பார்க்கலாம்... நெல்லை, சேலத்தில் நடந்த அதிரடி சம்பவம்... பறந்து வந்த ஹெலிகாப்டர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share