×
 

நெல்லை தனியார் கல்லூரியில் அடுத்தடுத்து பரபரப்பு... 7 மாணவர்கள் மருத்துமவனையில் அனுமதி ...!

நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்பாடால் 7 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: கல்லூரி  உணவகங்களின் உரிமம் ரத்து

நெல்லை திடியூர் பகுதியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். வெளியூரை சேர்ந்த மாணவர்களும் படிப்பதால் இங்கேயே தங்கி இருந்து படிப்பதற்காக அவர்களுக்கு தங்கும் விடுதியும் கல்லூரி உள்ளேயே செயல்பட்டு வருகிறது. 

கல்லூரியின் அருகே நம்பியாற்றில் இருந்து உபரி நீர் சென்று கொண்டிருக்கிறது இதை கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர், உணவு தயாரிப்பது உள்ளிட்ட கல்லூரி பயன்பாடுகளுக்காக எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் சேகரித்து பயன்படுத்தினர். 

இதனால் கல்லூரியில் விடுதிகளில் தங்கி இருந்து படிக்கும் 8 மாணவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், உடல் வலி என உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட பொது  சுகாதாரத்துறை நோய் தடுப்பு மருந்து துறை  அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. 

இதையும் படிங்க: தொட்டா தூக்கிருவேன்!! சைபர் கிரைம் குற்றங்களில் தமிழர்களே அதிகம்! மலேசியா, சீனா வரை பரவும் நெட்வொர்க்!

அதன் அடிப்படையில் நேற்று  சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரி தங்கும் விடுதிகள், உணவு தயாரிக்கும் உணவு கூடங்கள், குடிநீர் தேக்கி வைக்கும் தொட்டிகளில் தீவிர ஆய்வு நடத்தினர்.  
அப்போது சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருப்பது, வளாகங்கள் சுகாதாரமில்லாமல் இருப்பது உறுதியானது. உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களிடமிருந்தும் அவர்கள் பயன்படுத்திய தண்ணீர் குறித்தும் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதிலும் சுகாதாரம் இல்லாத தண்ணீரை பயன்படுத்தியது தெரிந்தது. 

அதிரடியாக  சுகாதாரத்துறை அதிகாரிகள் சுகாதாரமான முறையில் மாணவர்களுக்கு குடிநீர், உணவுகள் உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்யும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கி உத்திரவிட்டனர். அதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தினர் தேதி  குறிப்பிடாமல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட 8 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  7 பேருக்கு எலிக்காச்சல் அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி தங்கும் விடுதி உணவகத்தில் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் சுகாதாரம் இல்லாத முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்திற்கு செயல்பட்ட 2 உணவகங்களின்  உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அடிச்சு நொறுக்க போறாங்க... எல்லாத்துக்கும் காரணம் கமிஷனர் அருண் தான்...! சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share