கொளுத்தும் கோடை வெப்பம்... விவசாயிகளே உஷார்... ஆட்சியரிடம் இருந்து பறந்த வந்த அதிரடி உத்தரவு...!
கோடைகாலத்தில் விவசாய பயிர்களை காப்பாற்ற நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவுறுத்தல்
கோடை காலம் தொடங்கி இருக்கக்கூடிய நிலையில் அதிக அளவில் வெயிலின் தாக்கம் நெல்லை மாவட்டம் முழுவதுமே இருந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் பெரும்பான்மையான தொழிலாக விவசாயம் பார்க்கப்படுகிறது. பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளார்கள் இந்த பயிர்களை கோடைகாலத்தில் காப்பாற்றுவது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் விவசாயிகளுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தற்போது அதிகளவில் வெப்பத்தின் தாக்கம் இருந்து வரக்கூடிய நிலையில் குளங்கள் மற்றும் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது ஆகவே இரவை பாசன கால் வாயிலாக சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்களது நீர் இருப்பை பொறுத்து பயிர் சுழற்சி மற்றும் மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதன் மூலமாக மண்வளம் அதிகரித்து பூச்சி நோய் தாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்கும்.
குறைவான நீர் தேவைப்படும் சிறு தானிய பயிர்களான சோளம் கம்பு கேழ்வரகு குதிரைவாலி மற்றும் பயிறு வகை பயிர்களை உளந்து பாசிப்பயிறு தட்டைப்பயிறு மற்றும் எண்ணெய் வித்துக்கள் நிலக்கடலை ஆகியவற்றை சாகுபடி செய்ய தேர்ந்தெடுக்கலாம். விவசாயிகள் தங்களின் கிணறுகளில் உள்ள நீர் தேவை ஏற்ப குறைந்த வயதுடைய மற்றும் குறைவான நீர் தேவை உள்ள பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்வதன் மூலமாக விளைச்சலை பெறலாம்.
இதையும் படிங்க: நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!
அதிக வெப்பநிலை காரணமாக மண்ணின் ஈரத்தன்மை மற்றும் பாசன நீர் ஆவியாக வீணாவதை தடுக்கும் வகையில் மண்ணின் மேற்பரப்பில் காய்ந்த இலை தலைகள் தென்னை நாற்கழிவு மரத்தூள் அல்லது பாலித்தீன் தாள்களை கொண்டு மூடாக்கு இடலாம். இது மண்ணை குளிர்ச்சியாக வைத்து நீர் ஆவியாதனை தடுத்து மண்ணரிப்பை தடுக்கிறது செடிக்கு அருகில் இரண்டு அல்லது மூன்று அங்கு உயரத்திற்கு தண்டு பகுதியில் சிறிது இடைவெளி விட வேண்டும்.
கோடை உழவு என்பது வெப்பமான கோடை காலத்தில் சிறப்பு கருவிகளை பயன்படுத்தி ஆழமான உழவு செய்வதாகும்.பருவமழைக்கு முன்பு கோடை உழவை மேற்கொள்வதன் மூலம் பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் மற்றும் பல்லாண்டு கலைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியும்.
கோடையில் ஆழ உழும்போது மண்ணில் வாழும் சில பூச்சிகளும் நோய் காரணிகளும் புதைக்கப்படுகின்றன மண்ணிற்கு மேலே கொண்டுவரப்பட்டு பறவைகளால் உண்ணப்படுகின்றன. இவ்வாறு விவசாயிகள் நீர் இருப்பை பொறுத்து வறட்சியை தாங்கி வளரும் பயிர்களை தேர்ந்தெடுத்தல் சொட்டு நீர் பானம் அமைத்தல் மூடாக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து தங்களது பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விடிந்ததுமே தடாலடி மாற்றம்... விஜய்க்கு கிடைத்தது அனுமதி... தவெக தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!