கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு... நெல்லையில் உள்ளம் குளிர்ந்த உதய்..!
நெல்லையில் கொட்டும் மழையிலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக மாநில மீனவர் அணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மகள் அகஸ்டி மேரிஸ் பிரியங்கா - விற்கும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மீனவர் அணி தலைவர் ஆன்டனி ராஜ் மகன் ஆன்றோ அஷின் - க்கும் இன்று மாலை 4 மணிக்கு நாகர்கோவில் மேட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து கங்கா கிராண்ட் யூர் திருமண மண்டபத்தில் வைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த திருமண விழாவில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கீதா ஜீவன் உணவுக் கழகத் தலைவர் சுரேஷ் ராஜன், மேயர் மகேஷ், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்.. சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்..!
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் நாகர்கோவில் செல்வதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ரவுண்டானா மேம்பாலம் வழியாக வந்தார். அந்த நேரத்தில் பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து கொண்டிருந்தது.
அதையும் பொருட்படுத்தாத திமுகவினர் குடை பிடித்தபடி நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் எம் எல் ஏ அப்துல் வகாப் தலைமையில் மழையிலும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரில் இருந்தபடியே கட்சியினர் கொடுத்த புத்தகங்கள், சால்வைகளை வாங்கியபடி அங்கிருந்து புறப்பட்டு நாங்குநேரி வள்ளியூர் வழியாக நாகர்கோவில் சென்றார்.
இதையும் படிங்க: இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்டோமா..? - பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கும் மருமகன் குடும்பத்தார்..!