×
 

அவரு கையால வாங்க மாட்டேன்! ஆளுநர் ரவியை புறக்கணித்த மாணவி… பட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு…!

ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவியின் பட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான கல்வி நிறுவனமாகும். இது 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, தமிழ்நாடு அரசால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மக்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிறுவப்பட்டது. 

திருநெல்வேலி மாநகரில் உள்ள கொக்கிரகுளம் பகுதியில் மாவட்ட ஆட்சியக வளாகத்தில் முதலில் தொடங்கப்பட்ட இது, பின்னர் அபிஷேகபட்டியில் 520 ஏக்கர் பரப்பளவில் முக்கிய வளாகத்தைக் கொண்டு விரிவடைந்தது. மேலும், ஆழ்வார்குறிச்சியில் 120 ஏக்கர், பரமகல்யாணி கல்லூரியில் சுற்றுச்சூழல் அறிவியல் துறைக்கு 0.49 கி.மீ., மற்றும் ராஜக்கமங்கலத்தில் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்திற்கு 70 ஏக்கர் பரப்பளவு உள்ளது. 

இப்பல்கலைக்கழகம் கலை, மொழி, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட 24 துறைகளைக் கொண்டுள்ளது. இதில் ஆங்கிலம், தமிழ், சமூகவியல், தொல்லியல், நூலகவியல், மேலாண்மை, வணிகவியல், பொருளியல், இதழியல், குற்றவியல், உளவியல், வரலாறு போன்ற பல்வேறு பாடப்பிரிவுகள் அடங்கும். இவை இளநிலை, முதுநிலை, எம்.பில், மற்றும் பிஎச்.டி படிப்புகளை (முழுநேர மற்றும் பகுதிநேர) வழங்குகின்றன. மேலும், தொழில் முனைவோருக்கான ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்புகள், திறன் வளர்ச்சி டிப்ளமோக்கள் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 109 இணைப்பு கல்லூரிகள், 9 மனோ கல்லூரிகள், மற்றும் ஒரு சட்டக் கல்லூரி உள்ளன. 

இதையும் படிங்க: காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடும் தாமிரபரணி தண்ணீர்... மூழ்கும் நிலையில் முருகன் கோவில்...!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, மேடையில் ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கும்போது மாணவி ஒருவர் ஆளுநரிடம் பட்டத்தை பெற மறுத்துள்ளார். 

ஆளுநரிடம் பட்டத்தை பெற்றுக் கொள்ளாமல் நேரடியாக துணைவேந்தரிடம் முனைவர் பட்டத்தை பெற்றுக் கொண்டார் மாணவி ஆளுநர் அழைத்தும் அருகில் சென்று பட்டம் பெற மறுத்த மாணவி துணைவேந்தரிடம் சென்று முனைவர் பட்டத்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி தொடர்ந்து எதிராகவே செயல்படுவதால் அவரிடமிருந்து பட்டம் பெற மாணவி மறுத்ததாக கூறினார். ஆளுநரிடமிருந்து பட்டம் பெற மறுத்த மாணவியின் பட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: இனி இவர்களுக்கு ரூ.2000 அபராதம்... நெல்லை மாநகராட்சி அதிரடி உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share