#BREAKING நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் அதிரடி திருப்பம் - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்...!
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நெல்லை கேடிசி நகர் பகுதியில் ஜூலை 27ல் தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின் வயது 25. என்பவரை நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், என்ற வாலிபர் தனது அக்காவுடன் ஆன காதலை கைவிட வலியுறுத்தி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார். இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். காவல்துறையினர் சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணவேணி ஆகியோர் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஜூலை 28 இறந்த கவினின் உடல் நெல்லை அரசு மருத்துவமனை பிணவரையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன், கிருஷ்ணவேணி இருவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கவினின் உறவினர்கள் அவரது உடலை வாங்காமல் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்றும் காவல்துறையின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கவினின் உறவினர்கள் இன்று 3வது நாளாக உடலை வாங்க மறுப்பு தெரிவித்து சொந்த ஊரிலேயே இருக்கின்றனர். இதையடுத்து தற்போது நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கொலையாளி சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: கொடநாடு வழக்கு: நீதிபதி பங்களாவை ஆய்வு செய்யலாம்.. எந்த ஆட்சேபனையும் இல்லை..!
தற்போது கவினின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர். விசாரணை பாரபட்சமற்றதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக, இவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக, இந்த வழக்கு குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை(CB-CID)க்கு மாற்றப்பட்டுள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்..!