நெல்லையில் முதல்வர்... மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு... செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்...!
நெல்லை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் திமுக சார்பில் நெல்லையில் இன்று மாலை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற உள்ளது. நெல்லை டக்கரம்மாள்புரத்தில் திமுக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இதற்காக சென்னையிலிருந்து அவர் நெல்லைக்கு புறப்பட்டு சென்றார். விமான மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை சென்றார். கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்பது மட்டும் இல்லாமல் பொருநை அருங்காட்சியகத்தையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். பொருநை அருங்காட்சியகம் தமிழகத்தின் தொன்மையான நாகரிகத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு முக்கியமான அடையாளமாக உருவெடுத்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் பண்டைய பெயரான பொருநை எனும் பெயரில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட்டியார்பட்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வளாகம், தமிழர்களின் ஆதி நாகரிகத்தின் தொட்டிலாகக் கருதப்படும் பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தைப் பிரதிபலிக்கிறது. இதனிடையே, நெல்லை சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று மக்களை நோக்கி கைசைத்தவாறு சென்றார். வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுடன் அங்கிருந்த மக்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: நெல்லை மக்களே ரெடியா?... ரூ.356 கோடியில் பிரம்மாண்ட திட்டங்கள்... அமைச்சர் கே.என்.நேரு சொன்ன குட்நியூஸ்...!
சாலையின் இரு புறங்களிலும் நின்று கொண்டு தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்அருங்காட்சியகத்தை திறந்து வைப்பதுடன் நாளை புதிய மற்றும் முடிவற்ற பணிகளை திறந்து வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: 10 ஆண்டு கால சட்டப்போராட்டம்: 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை... கோவிலுக்குள் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!