×
 

நெல்லையை உலுக்கிய தந்தை, மகன் கொடூர கொலை..! மேலும் 2 பேர் சரண்... தொடரும் விசாரணை..!

நெல்லையில் தந்தை மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் இரண்டு பேர் சரணடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலாச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (40) என்பவரும் அவரது ஐந்து வயது மகன் ஜெயராஜும் மர்மக் கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அம்பாசமுத்திரம் பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஜூலை 2-ம் தேதி மதியம், காளிமுத்து தனது இரு மகன்களுடன் 15 வயது சின்னதுரை மற்றும் 5 வயது ஜெயராஜ் இரு சக்கர வாகனத்தில் கல்லிடைக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த ஒரு கார் அவர்களது வாகனத்தை மோதியது. இதில் மூவரும் சாலையில் விழுந்தனர். விபத்தின் தாக்கத்தால் ஐந்து வயது ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்தவர்கள் இறங்கி காளிமுத்துவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். அவரது தலையைத் துண்டித்து, கல்லிடைக்குறிச்சி - நெல்லை நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் வைத்துவிட்டு தப்பியோடினர். மூத்த மகன் சின்னதுரை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த கொலை பழிக்குப்பழியாக நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இரு குடும்பங்களுக்கிடையே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் பழைய தகராறு இந்தக் கொடூரத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. முன்பு நடந்த கொலைகளின் தொடர்ச்சியாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே பகீர்... தமிழகத்தை நடுங்கவிட்ட தந்தை, மகன் இரட்டை கொலை... முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

சம்பவத்துக்குப் பிறகு நெல்லை காவல்துறை துரித விசாரணை மேற்கொண்டது. இதுவரை 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதாகி உள்ளனர். பெரிய அளவிலான தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக மேலும் இரண்டு பேர் சரணடைந்துள்ளனர். இரட்டை கொலை வழக்கில் அருள் மற்றும் தங்கதுரை ஆகிய இருவரும் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்

இதையும் படிங்க: நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share