×
 

மிகப்பெரிய ஷாக்... மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு... நேபாளத்திற்கு மற்றொரு எச்சரிக்கை மணி...!

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப், இந்த வெள்ளத்தால் 17,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மற்றும் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து, போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரும் பேரழிவு ஏற்பட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் மற்றும் சேற்றில் புதைந்தவர்கள் என உயிரிழந்தோரின் எண்ணிக்கை 950-ஐ தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை 3,925 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் தலைநகர் காத்மாண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில மணி நேரங்களில் 600 மில்லிமீட்டர் வரை கனமழை பெய்துள்ளது. போதேகோஷி ஆற்றுப் பகுதியில் புதிய பனிப்பாறை ஏரிகள் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சுரங்கத்தில் சிக்கிய 933 பேர் கதி என்ன?... மீட்புபணிக்கு இடையே வெளியான எச்சரிக்கை... இந்தியாவுக்கு காத்திருக்கும் பேராபத்து...!

போதேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் குறுக்கே அமைந்துள்ள நீர்மின் திட்டங்களின் சுரங்கங்களில் சிக்கியிருப்பவர்களின் எண்ணிக்கை 933-லிருந்து 639 ஆகக் குறைந்துள்ளது. நீர்மின் சுரங்கங்களுக்குள் தேங்கியுள்ள சேறு, சகதி மற்றும் தண்ணீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சுரங்கங்களின் நுழைவாயில்களைக் கண்டறிந்து, உள்ளே சிக்கியிருப்பவர்களுக்கு ஏர் கம்ப்ரசர்கள் மூலம் செயற்கை சுவாசத்துக்குத் தேவையான காற்று செலுத்தப்பட்டு வருகிறது. அப்பர் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தில் இருந்து மட்டும் இதுவரை 254 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப், இந்த வெள்ளத்தால் 17,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சுரங்க மீட்புப் பணிகள் மற்றும் டிஎன்ஏ பரிசோதனை மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகளுக்காக, இந்தியா, சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடமிருந்து அதிநவீன ட்ரோன்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை வழங்குமாறு நேபாள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவின் சிறப்பு சுரங்க மீட்புக் குழுவினரும், 18 தடய அறிவியல் நிபுணர்களும் ஏற்கனவே நேபாளத்தில் முகாமிட்டு மீட்பு மற்றும் உடல்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நேபாளில் திரும்பிய திசையெல்லாம் மரண ஓலம்.. குவியும் பிணங்கள்... பலி எண்ணிக்கை இவ்வளவா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share