ஓடும் ரயிலில் ‘குவா... குவா’... தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்ட சிங்கப்பெண்...!
ஓடும் ரயிலில் பெண்ணிற்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ கிஷான் சபூர் என்பவரின் மனைவி 28 வயது அமிர்தா ஹோரா. இன்று அதிகாலை 05:26 மணிக்கு, பெங்களூரில் இருந்து வெஸ்ட் பெங்கால் செல்லும் ட்ரெயின் ஒன்றில் பயணித்த தம்பதிகளுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது, அப்போது ரயில்வே பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே காவலர் RPFபிரமோத் குமார் தகவல் அறிந்து உடனடியாக பெங்களூர் மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
அமிர்தா ஹோரா மற்றும் கிசான் சபூர் ததம்பதியினர் இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் கூலி தொழில் செய்து வருவதாகவும். மேலும் அம்ரிதா 9 மாத நிறை கர்ப்பிணியாக இருந்ததால் தலைப்பிரசவத்திற்கு சொந்த ஊர் செல்ல, நேற்று அதிகாலை தம்பதியினர் இருவரும் பெங்களூரில் இருந்து வெஸ்ட் பெங்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த நிலையில் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது அமிர்த ஓராவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் தானே கழிவறைக்கு சென்று அங்கு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
சுகப்பிரசவம் நடந்த நிலையில் ரயில் பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை நிலையத்திற்குள் நுழைந்தவுடன் ஜோலார்பேட்டை நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் தாய் மற்றும் சேய் ஆகியோரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: திருவள்ளூர் அடுத்து திருப்பதி.. நின்றிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பற்றி எரிந்த தீ..!!
கர்ப்பிணி பெண் தனக்குத்தலை பிரசவம் பார்த்துக்கொண்ட இந்த சம்பவம் அந்த ரயில் பெட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரயிலானது 12 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டது ஆனாலும் ஓடும் ரயிலில் சுகப்பிரசவம் நடைபெற்றது ரயில் பெட்டியில் உள்ள பயணிகள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
இதையும் படிங்க: ரயில்வே கேட்டில் நடந்த அதிர்ச்சி... அடுத்தடுத்து நிறுத்தப்பட்ட ரயிகள்.. வெளியான பரபரப்பு தகவல்