×
 

#BREAKING தமிழகத்தின் புதிய DGP நியமன விவகாரம் - ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு..!

புதிய டிஜிபி நியமன விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. 

தமிழக டிஜிபியாக பதவி வைக்கக்கூடிய சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையுடன் சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் தாமோதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு வந்து தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை வகுத்திருக்கிறது. 

அதன்படி 30 ஆண்டுகள் பணியில் இருக்கக்கூடிய அதிகாரிகளின் பட்டியலை டிஜிபி ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்கூட்டியே வந்து மத்திய அரசின் பணியாளர் தேர்வாணயத்திற்கு அனுப்ப வேண்டும். அந்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நியமித்திருக்கக்கூடிய ஒரு குழு, இந்த பட்டியலை ஆய்வு செய்து தகுதியான மூன்று நபர்களின் உடைய பெயர்களை மாநில அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அந்த மூன்று அதிகாரிகளில் ஒருவரை வந்து அரசு நியமிக்க வேண்டும் என்று அந்த விதிமுறைகளில் கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் தற்போதைக்கு எட்டு அதிகாரிகள் தகுதியான அதிகாரிகள் இருக்கக்கூடிய சூழல்ல புதிய டிஜிபி நியமனம் தொடர்பா தமிழக அரசு வந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழல்ல டிஜிபி நியமனம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் உச்சநீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் டிஜிபி நியமன நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு கோரிக்கையுடன் அளித்த மனு மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இந்த விதிமுறைப்படி புதிய டிஜிபி நியமன நடைமுறைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவு வேண்டும் என்ற ஒரு கோரிக்கை அந்த மனுவில் முன்வைக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிங்க: "கேப்டன் ரத யாத்திரை".. அனுமதி கேட்கும் தேமுதிக.. டிஜிபிக்கு பறந்த கடிதம்..!!

இந்த வழக்கை வந்து விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு தற்போதைய டிஜிபி 31ஆம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். நிர்வாக ரீதியிலான இந்த விவகாரத்தில் திமன்றம்  எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சொல்லி இந்த வழக்கு வந்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுருக்கிறார். அதே சமயம் புதிய டிஜிபி நியமனம் வந்து உச்ச நீதிமன்ற விதிகளுக்கு முரணாக இருந்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். இப்போதைக்கு இந்த வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்திருக்கிறார். 

இதையும் படிங்க: ரயில் விபத்து: எதுக்காக சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்கல? மனித உரிமைகள் ஆணையம் கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share