×
 

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 36 மணி நேரத்தில் சம்பவம் உறுதி...! 

மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை மையம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலடுக்கு சுழற்சியின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெற்கு கொங்கன் கோபா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் இந்த காற்றெழுத்த தாழ்வு பகுதியானது உருவாகி இருக்கிறது. 

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 36 மணி நேரத்தில் வலுவடைய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரபி கடலில்  உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த  36 மணி நேரத்தில் வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கேரளாவில் மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. 

நேற்றைய வானிலை அறிவிப்பின் போது சென்னை வானிலை ஆய்வு மையம், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும் என அறிவித்திருந்தது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வரும் 21 ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, நாளை மறுதினம் (22 ஆம் தேதி) வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என அறிவித்திருந்தது. 

இதையும் படிங்க: காலையிலயே பேரிடி.. மழையால் அரங்கேறிய சோகம்.. துடிதுடித்து பலியான 3 பேர்..!

இதன் காரணமாக இன்றும், நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

இதையும் படிங்க: கோடையில் மிரட்டும் கனமழை... தென்பண்ணையில் வெள்ளப்பெருக்கு! மக்களே உஷார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share