×
 

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் 200 ஆண்டுகால பழமையான சிலை கண்டெடுப்பு..!

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலின் புனரமைப்பு பணியின் போது 200 ஆண்டுகால பழமையான தண்டாயுதபாணி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள ஏகாம்பரநாதர் திருக்கோவிலானது உலக புகழ்பெற்ற வழிபாட்டுத்தலமாகும். முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவ மற்றும் சமண, பௌத்தவ திருக்கோயில்கள் அமையப் பெற்றுள்ளதால் இந்த மாவட்டம் கோவை நகரம் என்ற மற்றொரு பெயரையும் கொண்டுள்ளது.

அத்தகைய சிறப்புமிக்க மாவட்டத்தில், பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான மண் தளமாக போற்றக்கூடிய ஸ்ரீலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலானது பல்வேறு கலை நயங்களுடன் அமைந்துள்ளது. இத்திருகோயிலுக்கு மாவட்டம் மட்டும் இன்றி வெளி மாநிலத்தில் இருந்தும், ஏன் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தா சுவாமியை தரிசனம் செய்கின்றனர். 

என்ன நிலையில் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் திருக்கோவில் வளாகத்தில் உள்ள கோசாலை வளாகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: வரும் மே 5ஆம் தேதி வணிகர் சங்க மாநாடு.. விக்கிரமராஜா தகவல்!

முன்னதாக சமூக ஆர்வலர் டில்லிபாபு என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் திருக்கோயில் வளாகத்தில் முறைகேடாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், புனரமைக்கும் பணியின் போது கிடைக்கப்பெற்ற சிலைகளை செயல் அலுவலர் மறைக்கும் நோக்கில் செயல்படுவதாக மனு ஒன்றை அழுத்திருந்தார்.

இதனை கணக்கில் எடுத்துக் கொண்ட மாவட்ட ஆட்சியர், தொல்லியல் ஆலோசகர் மற்றும் பல்வேறு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புனரமைப்பு பணியின் போது கிடைக்கப்பெற்ற சிலைகளை ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் 200 ஆண்டுகள் பழமையான சிலைகள் என தெரிய வந்தது. தொடர்ந்து அந்த சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றி துணிகள் கொண்டு மூடப்பட்டு பாதுகாப்பாக கோயில் அலுவலகத்தில் வைத்தனர்.

இதையும் படிங்க: ராயப்பேட்டை மெட்ரோ ரயில் பணிகளில் சுணக்கம்.. முட்டுக்கட்டை போட்ட நிறுவனத்திற்கு நீதிமன்றம் சாடல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share