2026 புத்தாண்டு... முதல்வருக்கு வாழ்த்து சொல்ல குவிந்த திமுக தொண்டர்கள்..!
2026 ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்தின் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டு தமிழ்நாட்டில் அரசியல் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், புத்தாண்டை முன்னிட்டு கட்சித் தொண்டர்களுக்கு "உங்களில் ஒருவன்" என்ற தலைப்பில் சிறப்பு வாழ்த்து மடல் எழுதினார்.
இந்த மடலில், 2026ஐ "திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திடும் ஆண்டு" என்று வர்ணித்து, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அவர் திராவிடப் பொங்கல் விழாவுடன் புத்தாண்டு மலரட்டும் என்று கூறி, ஊர்தோறும் கலை, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளுடன் சமூகநீதி கொண்டாட்டங்களை நடத்துமாறு அழைப்பு விடுத்தார்.இந்த வாழ்த்து மடல் திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
புத்தாண்டு பிறந்தவுடன், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தொண்டர்கள் திரண்டு முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து நேரில் வாழ்த்து தெரிவிக்க படையெடுத்தனர். கட்சியின் வழக்கமான பாரம்பரியப்படி, புத்தாண்டு தினத்தில் தலைவரின் இல்லத்திற்கு தொண்டர்கள் படையெடுப்பது வழக்கம். இம்முறை, 2026 சட்டமன்றத் தேர்தல் ஆண்டு என்பதால், இந்த திரள்திரண்ட வருகை இன்னும் உற்சாகமாகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்தது.தொண்டர்கள் முதலமைச்சரைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், கட்சியின் வெற்றிக்காக மேலும் உழைப்போம் என்ற உறுதிமொழியையும் வெளிப்படுத்துவதாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது.
இதையும் படிங்க: 2026 விபத்தில்லா புத்தாண்டு... தொய்வில்லா பாதுகாப்பு பணி... காவல்துறை அறிவிப்பு...!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்தின் முன்பு ஏராளமான தொண்டர்கள் காத்திருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக உற்சாகத்துடன் வந்துள்ளனர். இந்தச் சந்திப்பு திமுகவின் அடிமட்ட அமைப்பு வலிமையை வெளிப்படுத்துவதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேர்தல் ஆயத்தங்களுக்கான உந்துதலாகவும் உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: தலைவா... தலைவா... அந்த சத்தம் இருக்கே..! ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து..!