அடுத்த ஆட்டம் ஆரம்பம்... நாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய அரக்கன்... வெளியானது முக்கிய அலர்ட்...!
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக ஒரு குறைந்த காற்ற தாழ்வு பகுதி உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டு மத்திய கிழக்கு வங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி உருவாவதற்கான சாதகமான சூழல் இருப்பதாகவும், அந்த சுழற்சியின் காரணமாக நாளைய தினம் வங்க கடல் பகுதியினுடைய கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்துடைய முன்னறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் அது காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற நிலையில் மட்டுமே இருக்கக்கூடிய வாய்ப்பும், அதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில அடுத்து இருக்கக்கூடிய இரண்டு தினங்களில்நகரக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாதற்கான சூழ்நிலை குறித்து தொடர்ந்து கண்கானித்து வருவதாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின்னர் அதுகுறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இதை எக்காரணம் கொண்டும் செய்யாதீங்க... புழல் ஏரியிலிருந்து சீறிப்பாயும் வெள்ளம்... சென்னைக்கு பறந்தது முக்கிய எச்சரிக்கை...!
குறிப்பாக வளிமண்டல சுழற்சியினால் உருவாகக்கூடிய குறைந்த காற்றழு தாழ்வு பகுதி என்பதால் அது உருவான பின்னர் அதனுடைய நகர்வு மேற்கு வடமேற்கு திசையில் இருக்கும் என்றும், தற்போது கணிக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையில் அடுத்த கட்டமாக அது வலுபெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா? அல்லது எந்த திசை நோக்கி மேலும் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்தெல்லாம் அது உருவான பின்னரே உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதையும் படிங்க: மிரட்டும் மோந்தா புயல்... தமிழகத்தில் இந்த 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...!
 by
 by
                                    