×
 

திமுக அரசால் சொல்லில் அடங்காத துயரம்... விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நயினார்...!

கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சற்று வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் பட்டியலை வெளியிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார். வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு சொன்னீர்களே செய்தீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார். இந்த நிலையில் பூங்கா, மருத்துவமனை போன்ற வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வில்லை என்றும் அவற்றை செய்தீர்களா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார். 

இந்த நிலையில், வேளாண்துறை பிரச்சனைகளைத் தீர்க்கவும், உணவுப் பொருட்கள் மற்றும் தோட்டக்கலை விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கவும் விவசாயப் பிரதிநிதிகள் அடங்கிய வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும் என்று 2021 தேர்தல் வாக்குறுதி எண் 35-ல் சொன்னீங்களே, செய்தீர்களா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

மேடைக்கு மேடை நானும் டெல்டாகாரன் தான் என உரிமை கொண்டாடுகிறீர்களே. ஒருபுறம், கொடுத்த வாக்குறுதியைக் கிடப்பில் போட்டு, விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க வேளாண் மேம்பாட்டுக் குழுக்களை அமைக்காததோடு, மறுபுறம் விவசாயிகளுக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளை இரட்டிப்பாக்கியது தான் தங்களின் நான்கரை ஆண்டு திமுக அரசின் சாதனை என்று கூறினார். விவசாயிகளுக்கான மின் இணைப்பைச் சரிவர வழங்காதது தொடங்கி, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறுதானியங்களை விற்காதது வரை திமுக அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த இன்னல்கள் எண்ணிலடங்காதவை என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: நிர்கதியான நீர் மேலாண்மை... இதுதான் தமிழக நிலைமை... நயினார் நாகேந்திரன் ஆவேசம்...!

வியர்வை சிந்தி விளைவித்த பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை தராமல் ஏமாற்றியதோடு, உரிய விலை கிடைக்காமல் தெருவில் கொட்டி போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டு தவிக்கவிட்ட திமுக அரசைத் தூக்கியெறிய விவசாயப் பெருமக்கள் தயாராகிவிட்டனர் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: வெறிநாய்க்கடி மையமாக மாறிய மதுரை... இது தான் அறிவாலய அரசியல்..! நயினார் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share