பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. நிதி பகிர்வு குறித்து விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் திட்டம்!
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது.
திட்ட கமிஷனுக்கு மாற்றாக கடந்த 2015 ஆம் ஆண்டு நிதி ஆயோக் கொண்டு வரப்பட்டது. தேசிய வளர்ச்சியில் மாநிலங்களுடைய பங்கு, தீவிர ஈடுபாடு, அரசின் திட்டங்கள் மற்றும் முன் முயற்சிகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் 10-வது நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றடைந்தார்.
இதையும் படிங்க: பயங்கரவாதம், நக்சலிசத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.. பிரதமர் மோடி திட்டவட்டம்..!
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு உள்ளிட்டு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தானும் பங்கேற்கொள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் கூட உள்ளது.
இதையும் படிங்க: ED வந்தால் ஓடிப் போய் மோடியை பார்க்கிறார் ஸ்டாலின்... சீமான் செம்ம கலாய்!