பொள்ளாச்சி அருகே வசமாக சிக்கிய நிகிதா! ரவுண்டு கட்டிய மக்கள்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்!
திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் புகார் அளித்த நிகிதா, பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஓட்டலில் தனது அம்மாவுடன் இருப்பதை சிலர் பார்த்தனர். போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் போலீஸ் கஸ்டடியில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பதைபதைக்க வைத்துள்ளது.திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்ற பெண் கொடுத்த திருட்டு புகாரின் பேரில் அஜித் குமாரை விசாரித்த க்ரைம் டீம் போலீசார், அவரை கொடூரமாக அடித்து துன்புறுத்தினர். இதில் தான் அவர் மரணம் அடைந்தார்.
லாக்அப் டெத்துக்கு காரணமாக இருந்த போலீசார் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அஜித்குமார் திருடவில்லை. அவன் அப்பாவி என்று பல தரப்பினரும் சொல்லி வருகின்றனர். இதற்கிடையே புகார் கொடுத்த நிகிதாவின் பின்னணி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு உள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நிகிதாவுக்கு எதிராக கொடுத்த பேட்டி திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே நிகிதா மூஞ்சை மூடிக்கொண்டு பேசும் வீடியோவும் வெளியானது.அதில் தனது தாய் சிவகாமிக்கு வீல் சேர் ஏற்பாடு செய்து கொடுக்க அஜித்குமாரிடம் பேரம் பேசியது பற்றியும் கூறியுள்ளார். வீடியோவில் நிகிதா பேசியதை வைத்து பார்க்கும் போது, திருமங்கலத்தில் ஸ்கேன் எடுக்க டாக்டர் நகைகளை கழற்ற சொன்னதால் அதனை பையில் போட்டேன் என்கிறார். ஆனால் ஸ்கேன் எடுக்கவில்லை. அங்கிருந்து கழற்றிவைத்த நகை பையை காரில் பின் சீட்டில் வைத்துவிட்டு 40 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து திருபுவனம் கோயிலுக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: நிகிதாவுக்கும் திமுக தலைவர்களுக்கும் தொடர்பு? கொளுத்திப்போட்ட நயினார்.. சிக்கலில் ஸ்டாலின்!!
அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த அஜித்குமாரிடம் வீல் சேர் ஏற்பாடு செய்து தர சொல்லி இருக்கிறார். அவரிடமே கார் சாவியும் கொடுத்து கார் பார்க் செய்ய சொன்னதாக சொல்கிறார். தரிசனம் முடிந்து வந்த பிறகு வீல் சேர் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு அஜித்குமார் 500 ரூபாய் கேட்டுள்ளார்.
இது இலவச சேவை தானே என வாக்குவாதம் செய்த நிகிதா 100 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அதன் பிறகே நகை காணாமல் போனது தெரியவந்து அறநிலையத்துறைக்கும், போலீசுக்கும் புகார் கொடுத்ததாக சொல்கிறார்.
இதில் கார் பார்க்கிங் செய்து கொடுத்தார் என்பதற்காக மட்டுமே அஜித்குமாரை குற்றவாளி போல அணுகி உள்ளனர். எந்த இடத்தில் நகை காணாமல் போனது என்பது குறித்து நிகிதாவுக்கே உறுதியாக தெரியவில்லை. இதனால் உண்மையில் என்ன நடந்தது என்ற குழப்பம் ஏற்பட்டது. பலரும் நிகிதா மீது சந்தேகம் கிளப்பினர். உடனே திருமங்கலத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு அவர் தலைமறைவானார். இந்த நிலையில் தான் இப்போது பரபரப்பு சம்பவம் நடந்து இருக்கிறது.
அதாவது, பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஓட்டலில் தனது அம்மாவுடன் நிகிதா இருப்பதை சிலர் பார்த்தனர். போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விவரம் கேட்ட போலீசார், கடைசியில் அவரை விட சொல்லி இருக்கின்றனர். ‛2 மணி நேரம் நிகிதாவை லாக் பண்ணி வச்சி இருந்தோம் சார். ஆனா கன்ட்ரோல் ரூமுல இருந்தவங்க விட சொல்லிட்டாங்க.
இப்ப அவங்க கார் கோவை நோக்கி போய்கிட்டு இருக்குது’ என்று இன்னொரு போலீசாரிடம் சம்மந்தப்பட்டவர் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. பொள்ளாச்சி பகுதி ஓட்டலில் நிகிதா தனது அம்மாவுடன் இருக்கும் வீடியோவும், அவர் வந்த கார் படமும் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: திருப்புவனம் அஜித்குமார் மரணத்தில் ட்வீஸ்ட்.. புகாரளித்தவர் மீது குவியும் மோசடி வழக்கு.. யார் அந்த நிகிதா?