×
 

19 வருஷத்துக்கு அப்புறம் வந்த நிபா வைரஸ்; 2 பேர் கவலைக்கிடம்.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

மேற்கு வங்கத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு நிபா வைரஸ் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 செவிலியர்கள் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2 செவிலியர்கள் உயிருக்குப் போராடி வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாராசாத் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் இரு செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது கடந்த ஜனவரி 11-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்கள் இருவரும் மிக மோசமான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா அறிவுறுத்தலின்படி, தேசிய நிபுணர் குழு கொல்கத்தாவிற்கு விரைந்துள்ளதோடு, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அவசரக்கால செயல்பாட்டு மையம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, பாதிக்கப்பட்ட செவிலியர்கள் இருவரும் பூர்வ வர்த்தமான் பகுதிக்குச் சென்று வந்தபோது இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 90-க்கும் மேற்பட்டோர் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவும் தன்மை கொண்டதோடு, மனிதர்களிடையே பரவும்போது 75 சதவீத மரண விகிதத்தைக் கொண்டிருப்பதால், தேசிய அளவில் பெரும் அச்சம் நிலவுகிறது.

இதையும் படிங்க: இது என்ன கும்பல் ஆட்சியா? உச்சநீதிமன்றத்தில் மமதா பானர்ஜியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய துஷார் மேத்தா!

இந்நிலையில், அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் தொற்று தீவிரமடைந்துள்ள சூழலில், தமிழகத்தில் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மந்தமாக இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கேரளாவில் கடந்த 2025-ஆம் ஆண்டு நிபா பாதிப்பு ஏற்பட்டபோது தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிரச் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், தற்போது மேற்கு வங்கத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் விமான நிலையங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் திமுக அரசு போதிய கண்காணிப்பு நடவடிக்கைகளை இன்னும் தொடங்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடம் எவ்வித சுகாதாரச் சோதனைகளும் செய்யப்படாதது தொற்று பரவ வழிவகுக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறை உடனடியாக நிபா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, தீவிரக் கண்காணிப்பைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: "2026 புத்தாண்டு - ஆரம்பமே இப்படியா?" சிலிண்டர் விலை அதிரடி உயர்வு; மக்களுக்கு மத்திய அரசு கொடுத்த முதல் ஷாக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share