2வது நாளாக துருவி துருவி விசாரணை... பற்ற வைத்த நிர்மல்குமார்... கரூர் விவகாரத்தில் சிபிஐக்கு கிடைத்த முக்கிய தகவல்...!!
செங்கோட்டையன் தவெகவில் இணைகிறாரா என்று கேள்வி கேட்டதற்கு அது குறித்து தற்போது பதில் கூற முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார்
கரூர் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சதி செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைகிறாரா என்று கேள்வி கேட்டதற்கு அது குறித்து தற்போது பதில் கூற முடியாது என பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் கருத்து
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக பிரச்சார பரப்பரைக் கூட்டத்தின் போது கூட்டம் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், வணிக வளாக கடை உரிமையாளர்கள், காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், தவெக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று, இன்றும் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இன்று இரண்டாம் நாள் விசாரணைக்கு ஆஜராகி மூன்று மணிநேர விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இதையும் படிங்க: செல்போனில் சீக்ரெட் ஆலோசனை... இன்று இரவோடு இரவாக செங்கோட்டையன் செய்யப்போகும் தரமான சம்பவம்...!
அப்போது பேசிய அவர், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரியிடம் நாங்கள் பிரச்சார கூட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் மற்றும் நடந்த சம்பவங்கள் குறித்தும், சந்தேகப்படும் சில நபர்களின் பெயர்கள் குறித்தும் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். இது ஒரு சதி செயல் என்றும் இந்த சதி செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நிச்சயம் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும், நேற்றும் இன்றும் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளராக அர்ஜுனா, நான் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் பவுன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினோம்.
நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து சிபிஐ விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தந்துள்ளதாகவும், எங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளோம், சதிசெயலில் ஈடுப்பட்டவர்கள் இங்கு கூட சுற்றி திரியலாம் என்றும் கூறினார்.
இது குறித்து மக்கள் மன்றத்தின் முன்பு சொல்லலாமே என்று செய்தியாளர் கேட்டதற்கு, தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அதனை வெளிப்படையாக சொல்ல முடியாது என்றும், மீண்டும் விசாரணைக்கு வருவீர்களா? தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என்று கேள்வி கேட்டதற்கு நாங்கள் சிபிஐ விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் நாங்கள் மீண்டும் ஆஜராகவும் என்றும், எங்கள் தரப்பு விளக்கங்களை தருவதற்கு தயாராக உள்ளோம் என்றார்.
வரும் 27 ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைவதாக கூறப்படுகிறது என்று கேட்டதற்கு அது பற்றி இங்கு கூற தேவையில்லை என மறுப்பு தெரிவித்தார்.
விஜய் காலதாமதமாக வந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது என்று கேள்வி எழுப்புகையில் உங்களுக்கே அது தெரியும் என்றும் ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது இருசக்கர வாகனங்கள், கார்களில் அதிக அளவில் வந்தனர். நாங்கள் எங்களது தன்னார்வலர்களைக் கொண்டு கட்டுப்படுத்த இயன்ற முடியவில்லை என்றும், தற்போது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி குறிப்பிட்ட மண்டபம் அல்லது இடங்கள் நடைபெறுகிறது.
மீண்டும் திறந்த வெளி இடங்களில் நடைபெறும் என்று கேட்டபோது இது குறித்து கட்சி தலைமையில் நிர்வாகிகள் உடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு கூறப்படும். தற்போது அது குறித்து இங்கு கூறத் தேவையில்லை. சதி செயலில் ஈடுப்பவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: சிபிஐ வசம் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்? - இறுகும் பிடி... 2வது நாளாக ஆனந்த், ஆதவிடம் விசாரணை...!