×
 

டைம் பாஸுக்கு கட்சி நடத்துறாரு சீமான்...! அதெல்லாம் கண்டுக்காதீங்க... தவெக நிர்மல் குமார் தாக்கு..!!

விஜய் குறித்து சீமான் பேசிய கருத்துக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகி நிர்மல் குமார் பதிலடி கொடுத்தார்.

தமிழக அரசியலில் கட்சிகள் இடையேயான வார்த்தைப் போர்கள் புதிதல்ல. ஆனால் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில துணைச் செயலாளரான சி.டி.ஆர். நிர்மல் குமார் அளித்த ஒரு கருத்து சற்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானைப் பற்றி பேசும்போது, "சீமான் டைம் பாஸ்க்குத்தான் கட்சி நடத்துறார்... அவர் பேசுறதெல்லாம் பெருசா எடுத்துக்க வேண்டாம்" என்று நிர்மல் குமார் கூறியுள்ளார். 

விஜய்யிடமிருந்து அழைப்பு வந்தால் என்று கேள்வி எழுப்பப்பட்டது. விஜய் எப்படி எனக்கு அழைப்பு விடுக்க முடியும் இது என்ன கேள்வி என்று சீமான் கேட்டிருந்தார். அரசியலில் 16 வருடங்களாக களமாடி வருபவன் நான் என்றும் அனுபவத்திலும் சரி வயதிலும் சரி மூத்தவன் நான்தான் எனவும் தெரிவித்தார். நான் தான் விஜய்க்கு அழைப்பு விடுக்க வேண்டுமே தவிர தம்பி அண்ணனுக்கு அழைப்பு விடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

அண்ணா, எம்ஜிஆரை பின்பற்றுவதாக கூறிவிட்டு அவர்கள் ஆரம்பித்த கட்சிகளை ஒழிக்க நினைக்கிறார் என்றும் ஊழல் கட்சி என்று கூறி வருகிறார் விஜய் எனவும் தெரிவித்தார். தனித்து நிற்பது தொடர்பான விஜய் கருத்துக்கு பதில் கொடுத்த சீமான், என் வசனத்தை விஜய் எடுத்துப் பேச கூடாது என்றும் இன்னும் நீங்கள் தனித்து நிற்கவேயில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: வீட்டுக்கு ஒருத்தரா? புரிதல் இல்லாத இளம் தலைமுறை... விஜய் மறைமுகமாக சாடிய வேல்முருகன்..!!

சீமான் கருத்து குறித்து தமிழக வெற்றி கழக மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது டைம் பாஸ் செய்வதற்காக சீமான் கட்சி நடத்துவதாகவும் அதையெல்லாம் பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார். ஏனென்றால் பதவி வேண்டாம், அரசு வேண்டாம் என்ற சீமான் கூறுவதாகவும் பொழுதுபோக்கிற்காக அவர் கட்சி நடத்துகிறார் என்றும் விமர்சனம் செய்தார். விஜய் தலைமையிலான தவெக விரைவாக வளர்ந்து வரும் நிலையில், சீமான் தரப்பிலிருந்து வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தக் கருத்து அமைந்துள்ளது. 

இதையும் படிங்க: அப்பாவி ஊழியர்களுக்கு சிறை... குரலை நசுக்கும் திமுக...!! TVK டைரக்ட் அட்டாக்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share