×
 

தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து முக்கியமான கருத்துக்களை தெரிவித்தார். தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற சூழலில் மாநிலத்தின் கடன் பளு மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.நிர்மலா சீதாராமன் தெளிவாகக் கூறியதாவது, அரசுகள் கடன் வாங்குவதில் தவறில்லை என்றார்.

ஆனால் அந்தக் கடனை அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும், கல்வி, மருத்துவம், தொழில் முதலீடுகள் போன்ற உற்பத்தி சார்ந்த துறைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். நலத்திட்ட உதவிகளுக்கு மட்டும் கடனை செலவழிப்பது சரியல்ல என்றும், பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கும்போது அத்தகைய திட்டங்களை செயல்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

கடன் வாங்கி என்ன செய்கிறோம் என்பதே முக்கியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலை குறித்து பேசிய அவர், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு தயாராக இருப்பது வரவேற்கத்தக்கது என்றார். திமுக ஆட்சியின் போதும் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதிகள் முறையாக வழங்கப்பட்டதாகவும், தற்போது எந்த நிதி நிலுவையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் 10 பாலியல் கொடூரங்கள்... என்ன CM சார்..? ஏதாச்சும் பேசுங்க... நயினார் ஆவேசம்..!!

தமிழ்நாட்டிற்கான நிதி உரிய நேரத்தில் கட்டாயம் வழங்கப்படும் என்ற உறுதியையும் அவர் அளித்தார்.சட்டசபையில் அரசியல் விமர்சனங்கள் நடைபெறுவது இயல்பானது என்றும், எதிர்க்கட்சியினரும் ஆளும் கட்சியினரும் தங்கள் கருத்துக்களை முழுமையாக பதிவு செய்யலாம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். இது ஜனநாயகத்தின் அடிப்படை என்று அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசின் வஞ்சனை..! நயினார் கண்டனம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share