×
 

ஓட்டு எண்ணும் போது சிரிக்கக்கூடாது! கூடுதல் கவனம் தேவை! தேர்தல் அலுவலர்களுக்கு கறார் உத்தரவு!

ஓட்டு எண்ணும் பணியில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடாது – தேர்தல் அலுவலர்களுக்கு கடும் அறிவுறுத்தல்!!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டக் கூடாது என்று கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி. கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்தப் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. 

கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பவன்குமார் கிரியப்பனர் பேசுகையில், “கோவை மாவட்டத்தில் எங்கும் சோதனை ஓட்டுப்பதிவு நடைபெறவில்லை. எனவே கணக்கீட்டில் எந்தப் பிரச்னையும் வராது. ஓட்டு விவரங்களை எழுதும்போது எந்தப் பிழையும் இருக்கக் கூடாது.

இதையும் படிங்க: இது எலெக்‌ஷன் பெட்டிங்?! இளம் தலைமுறையினருக்கு குறி! இன்று பணம் கட்டினால் தேர்தல் முடிவு அறிவித்ததும் பணம்?!!

ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஏஜென்ட்களிடம் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஆட்சேபனை எழுந்தால் விதிகளின்படி செயல்படுவதாகக் கூறி, ஏற்கனவே வாங்கிய கையெழுத்துகளைக் காட்டுங்கள். பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்” என்றார்.

மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில், “இயந்திரத்தில் தவறுதலாக பட்டன் அழுத்திவிட்டோம் என்று பயப்பட வேண்டாம். உங்கள் முகபாவனைதான் முக்கியம். ஓட்டு எண்ணும் நாளில் சிரிப்பது, கோபப்படுவது, பதற்றப்படுவது உள்ளிட்ட எந்த உணர்ச்சியும் உங்கள் முகத்தில் தெரியக் கூடாது. ‘பணியை முடித்தோம், வந்தோம்’ என்ற நிலையில் இருக்க வேண்டும். ஏஜென்ட் யாராவது உங்களைத் தெரிந்தவர் என்று கை காட்டினாலும் உணர்ச்சியை வெளிப்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் உங்கள் கதையுடன் தொகுதி தேர்தல் அலுவலரின் கதையும் முடிந்துவிடும்” என்று எச்சரித்தார்.

கோவை தெற்கு தொகுதி ஏற்கனவே அதிக கவனத்தை ஈர்த்துள்ளதால், ஓட்டு எண்ணிக்கையின்போதும் அங்கு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை கீழ் தளத்தில் நடைபெறும் என்றும், மின்னணு இயந்திரங்கள் முதல் தளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு சுற்று முடிந்த பிறகுதான் அடுத்த இயந்திரங்கள் கொண்டு வரப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

ஓட்டு எண்ணிக்கை நாளில் அமைதியாகவும், நடுநிலையுடனும் செயல்பட வேண்டும் என்பதில் தேர்தல் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share