ஓடும் ரயிலில் பாலியல் தொல்லையா?... சல்லி, சல்லியாய் நொறுங்கிய எலும்புகள்... வடமாநில பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்...!
ராசிபுரம் அருகே ரயிலில் அடிபட்டு வடமாநில பெண்ணிற்கு 2 கால்களும் முறிவு. இளைஞர்கள் ரயிலில் தள்ளவிடப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மனைவி ஜெமினி (வயது 19). இவர், ராசிபுரம் அடுத்த அத்தனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில்(டயர் தயாரிப்பு நிறுவனம்) கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இன்று அதிகாலை 3.45 மணியளவில், அவருடன் பணிபுரியும் 2 இளைஞர்களுடன் கோரைக்காடு பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், அந்த இளைஞர்கள் இளம்பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் வடமாநில பெண்ணின் 2 கால்களிலும் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் இளைஞர்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் வடமாநில பெண் ரயிலில் தள்ளிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!
இதனிடையே பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வட மாநில பெண்ணை இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்து ரயிலில் தள்ளி கொல்ல முயன்றனரா?, அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குதிரை பேரம் ஆட்சியா..? குதிரை வேகத்தில் செயல்படும் அரசு... முதல்வர் விஜய் உரை..!