வடமாநில தொழிலாளர்களையும் வளைத்துப்போட்ட திமுக... நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் நடந்த தரமான சம்பவம்...!
நலன் காக்கும் ஸ்டாலின் முகாம், பயன் பெற்ற வட மாநில தொழிலாளர்கள்.
பரமக்குடியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் செங்கல் சூளையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பயனடைந்தனர். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் இன்று நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. காலை முதல் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சிறியவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் என ஏராளமானோர் தங்களது உடல் நலம் குறித்து பரிசோதனை செய்தனர்.
பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளது. இங்கு கொல்கத்தா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முத்துவயல் கிராமத்தில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் செங்கல் சூலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து பயன்பெற்றனர்.
இதையும் படிங்க: சி.வி.சண்முகம் செலுத்திய ரூ.10 லட்சம்.. தமிழக அரசு போட்ட உத்தரவு என்ன..??
இது குறித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வட மாநில தொழிலாளி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், கடந்த 15 ஆண்டுகளாக செங்கல் சூலையில் பணிபுரிந்து வருகிறேன் மருத்துவ தேவைக்கு தனியார் மருத்துவமனையை செல்வோம். முதன்முறையாக தமிழக அரசு சார்பில் இலவசமாக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றோம்.இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
இதையும் படிங்க: ஆக. 16ம் தேதி.. 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் கிடையாது.. காரணம் இதுதான்..!!