×
 

விண்ணைப் பிளந்த “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத்” முழக்கம்- திடீரென சிதறிய ஓடிய வடமாநில கும்பல்... ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு...!

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த வடமாநில யாத்ரீகர்கள் கோஷமிட்டபடி தப்பியோடியதால் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

வட மாநிலமான உத்திர பிரதேசத்தில் இருந்து   மதுரை வரை ரயிலில் வந்த சுமார் 400க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள், மதுரை பேசஞ்சர் ரயில் மூலம் ராமேஸ்வரம் நோக்கி பயணம் செய்துள்ளனர். இதில் சுமார் 100 பேர் மட்டுமே முறையாக டிக்கெட் எடுத்து பயணம் செய்திருந்ததாகவும், மீதமுள்ள 300க்கும் மேற்பட்டோர் டிக்கெட் இன்றி பயணம் செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததையடுத்து, தென்னக ரயில்வேயின் டிக்கெட் பரிசோதகர்கள் நடுவழியில் ரயிலில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அப்போது டிக்கெட் இன்றி பயணம் செய்திருந்தவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், சுமார் 100க்கும் மேற்பட்டோரிடமிருந்து ரூ.25,000 வரை அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், 200க்கும் மேற்பட்டோர் எந்தவித அபராதமும் செலுத்தாமல் பயணம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களை மடக்கி விசாரணை நடத்த முயன்றுள்ளனர். அப்போது அந்த யாத்திரிகர்கள் அனைவரும் கும்பலாக ஒன்று சேர்ந்து, “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத், ஜெய் ஹோ” என கோஷமிட்டபடி அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த திடீர் சம்பவத்தால் செய்வது அறியாமல் திகைத்துப் போன டிக்கெட் பரிசோதகர்கள், வேறு வழியின்றி அவர்கள் சென்றதை பார்த்துக்கொண்டே நின்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கணவன் கண்ணெதிரே மனைவிக்கு பாலியல் தொல்லை... ராமேஸ்வரம் மண்ணில் கொடுமை... 2 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்...! 

இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர்கள் கூறுகையில், “அபராதம் விதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்தே, திட்டமிட்ட முறையில் கோஷமிட்டபடி நாடகமாடி தப்பியுள்ளனர்” என தெரிவித்தனர்.இந்த சம்பவம், ரயில்வே விதிகளை மீறி டிக்கெட் இன்றி பயணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... ராமேஸ்வரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share